1. செய்திகள்

வேளாண் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல்- செப். 29ல் வெளியீடு!!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தமிழகத்தில் வேளாண் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் (Ranking List) வரும் 29ம் தேதி வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையில்(TamilNadu agriculture university) இளங்கலை இளம் அறிவியல் பிரிவில், பல்கலையின் கீழ் உள்ள, 14 உறுப்பு கல்லூரிகளில் 1,600 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 3,100 இடங்களும் என, மொத்தம், 4,700 இடங்கள் உள்ளன.

கடைசிநாள் (Last Date)

இந்த படிப்பில் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது. இணையவழியில் நடைபெற்றுவரும் மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவில் (Registered), இதுவரை, 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. 

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்டம்பர் 17-ம் தேதி வரை காலக்கெடு உள்ளது. பிழைத்திருத்தம் செய்ய, செப்டம்பர் 18 முதல் 20 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Credit : The Hindu

தரவரிசைப் பட்டியல் (Ranking List)

செப்டம்பர் 29ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். விபரங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணத்தை www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.

மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களுக்கு, www.tnauonline.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை பார்க்கலாம்.

மேலும், விபரங்களுக்கு 0422 – 6611322, 6611345, 6611346 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?

 

English Summary: Rankings for Admission to Agricultural Courses - Released on the 29th !!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.