பெங்களூரு தக்காளி, நம் களி மண் நிலத்தில் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விவசாயி வி.எம்.ஹரி பல்வேறு தகவல்களை கூறினார். முன்பெல்லாம் தமிழகத்தில் விலைக்கு மட்டுமே கிடைத்த பெங்களூரு தக்காளி, இன்று விளைவிக்கப்படுகிறது.
பெங்களூரு தக்காளி (Bangalore Tomato)
சவுடு கலந்த களி மண் நிலத்தில், புதுப்புது ரகங்களை பயிரிடுவது வழக்கம். நடப்பு ஆண்டு, தை பட்டத்தில் பெங்களூரு ரக தக்காளி சாகுபடி செய்தேன். இது, நம் ஊர் சவுடு கலந்த களி மண்ணுக்கு எவ்வாறு மகசூல் கிடைக்குமோ என யோசித்தேன். எதிர்பார்த்த மகசூலை விட நன்றாக விளைந்து, கூடுதலாக கிடைத்தது.
உதாரணமாக, 10 சென்ட் நிலத்தில், பெங்களூரு தக்காளி சாகுபடி செய்தால், 45 நாட்களுக்கு பின் அறுவடை துவங்கும். அறுவடை முடிவில் ஒவ்வொரு செடிக்கும், 10 கிலோ தக்காளி வரை, மகசூல் பெற முடிகிறது.
மகசூல் (Yield)
தக்காளி மகசூல் பொறுத்தவரை அன்று அன்று விற்பனை செய்யப்படும். சந்தை நிலவரத்தை பொறுத்து, தக்காளியில் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
Share your comments