தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (06-08-2022) வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், 4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக மையங்கள், வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்நோக்கு அரங்கம் உள்ளிட்ட கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை - உழவர் நலத்துறை இயக்குநர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி. வேளாண்மை இயக்குநர் திரு. ஆ. அண்ணாதுரை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குநர் முனைவர் ச.நடராஜன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி, வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் திரு.இரா.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள கலந்துக் கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் - காட்டாங்குளத்தூர் திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் மற்றும் ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்டம் - அகஸ்தீஸ்வரம், திருப்பத்தூர் மாவட்டம் - ஆலங்காயம், இராமநாதபுரம் மாவட்டம் - உச்சிப்புளி மற்றும் முதுகுளத்தூர், சேலம் மாவட்டம் - கொங்கனாபுரம், மயிலாடுதறை மாவட்டம் - குத்தாலம் வட்டாரம், நாகமங்கலம் ஆகிய இடங்களில் 22.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் கடலூரில் மண் ஆய்வுக்கூடம், மதுரை மற்றும் பரமக்குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம் என 3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன 4 ஆய்வுக்கூடங்கள்.
மேலும் படிக்க:
விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதிமுறைகள் சொல்வது என்ன?
பொள்ளாச்சி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை மற்றும் விலை அதிகரிப்பு
Share your comments