1.TNAU உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் இடுபொருட்களை வாங்குவதற்கு AgriCart அறிமுகம்!
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணையதளம் மூலம் விவசாயத்திற்கு தேவையான தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் இடுபொருட்களை வாங்குவதற்கு வசதியாக TNAU AgriCart ஆன்லைன் விற்பனை போர்டல் சேவையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. தேவைபடுவோர் கீழ் காணும் இணையதளம் வாயிலாக விதைகள் மற்றும் இடுபொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
2.தென்னை மரக் காப்பீட்டுத் திட்டம்
நெட்டை, குட்டை மற்றும் ஒட்டுரகத் தென்னை மரங்கள் அனைத்திற்குநம் காப்பீடு செய்து கொள்ளலாம். திட்டத்தில் சேர்வதற்கான தகுதி குட்டை மற்றும் ஒட்டுரக் தென்னை மரங்களை 4 முதல் 60 ஆண்டுகள் வரையிலும் நெட்டை மரங்களை 7 முதல் 60 ஆண்டுகள் வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் பலன் தரக்கூடிய 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை வட்டார விரிவாக்கம் மையத்தை அணுகுங்கள்.
3.வண்டல் மண் எடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம்
விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்க மண் எடுப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர் பாண்டியன், தெரிவித்துள்ளார். திருபத்தூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சி, மற்றும் உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டண மில்லாமல் பொதுமக்களின் வேளாண்மை நோக்கம், மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணபத்தாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண் அலுவலர்கள் சான்று, மண்பாண்டம் தொழிலாளர்கள் சங்கம் சான்று, விஏஒவிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க: EPFO வேலை வாய்ப்பு 2023 – 2859 SSA காலிப்பணியிடம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
4.KVK சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பருப்பு பயிர் விவசாயம் அதிகரிப்பு
காரைக்காலில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரா (கேவிகே) வல்லுநர்கள் மாவட்டம் முழுவதும் சுமார் நூறு ஏக்கரில் விவசாயிகள் மத்தியில் ஓரிரு பயறு வகை பயிர்களை பரிசோதித்து வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ் ஜெயசங்கர் தலைமையிலான கேவிகே வல்லுநர்கள், 50 விவசாயிகளுக்கு WGG-42 ரக பச்சைப்பயறு விதைகளையும், 50 விவசாயிகளுக்கு VBN 8 உளுந்து விதைகளை காரைக்கால் மாவட்டத்தில் 50 விவசாயிகளுக்கு க்ளஸ்டர் பிரண்ட் லைன் டினாமினேஷன் திட்டத்தின் கீழ் வழங்கினர். காரைக்கால் மாவட்டம் முழுவதும் பருப்பு சாகுபடி தற்போது குறைந்து, 1,000 ஹெக்டேருக்கு கீழ் உள்ளது. எனவே, இத்திட்டம் பருப்பு சாகுபடிக்கு கை கொடுக்கும்.
5.அன்னாசி பழம் விலை கடும் உயர்வு
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் முன்பு ஊடுபயிராக வாழைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ரப்பர் தோட்டத்தில் ஊடு பயிரின் இடத்தை அன்னாசி செடிகள் பிடித்து விட்டன. கோடை காலம் என்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் பெரும்பாலும் வியாபாரிகள் தோட்டத்துக்கு வந்து பழங்களை வாங்கி செல்கிறார்கள். இரண்டு வருடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 டன் அன்னாசி பழம் கிடைக்கும். கடந்த ஆண்டு துவக்கத்தில் இருபது ரூபாய்க்கும் கீழ் அன்னாசியின் விலை இருந்தது குறிப்பிடதக்கது. தற்போது கிலோவுக்கு 53 ரூபாய் கிடைக்கிறது.
6.விதைகளை கண்டறியும் வகையில் SATHI போர்டல் மற்றும் மொபைல் App அறிமுகம்
மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று SATHI (விதை கண்டுபிடிப்பு, அங்கீகாரம் மற்றும் முழுமையான இருப்பு) போர்டல் மற்றும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். விதை உற்பத்தி, தரமான விதை அடையாளம் மற்றும் விதை சான்றளிப்பு ஆகியவற்றின் சவால்களைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட விதை கண்டுபிடிப்பு, அங்கீகாரம் மற்றும் சரக்குகளுக்கான மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் அமைப்பு இதுவாகும். 'உத்தம் பீஜ் - சம்ரித் கிசான்' என்ற கருப்பொருளில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து தேசிய தகவல் மையம் (NIC) இதை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
7.இன்று தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இன்று தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்களில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவியது. இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவு காணப்பட்டது.
மேலும் படிக்க:
Tangedco புதிய திட்டம்: யூனிட்டுக்கு ரூ. 3முதல் 4 வரை சேமிக்கலாம்!
Share your comments