நெல் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பயிரைப் பாதுகாத்து கொள்ள, டிசம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
-
நாமக்கல் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்
சம்பா II மற்றும் வெங்காயம் II பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
இதன்படி நெல் II வால் சம்பா 21 பிர்க்காக்களிலும் மற்றும் வெங்காயம் II 4 பாக்காக்களிலும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளது.
-
கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
-
கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
-
இத்திட்டத்தில் நெல் || சம்பா பயிருக்கு 15.12.2020ம் தேதிக்குள்ளும், வெங்காயம் 1 பயிருக்கு 30.11.2021 தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு நெல் || சம்பா பயிருக்கு ரூ.494,25 பிரிமீயம் மற்றும் வெங்காயம் II பயிருக்கு ரூ.1805.58 பிரிமியம் செலுத்த வேண்டும்
-
பயிர் காப்பீடு செய்யும் முன், முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கள், விதைப்பு சான்று வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை வெறுக்க வேண்டும்.
-
இதுதொடர்பான விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குதல் அலுவலகங்களை அணுகலாம்.
அரியலூர்
-
இதேபோல், அரியலூரிலும் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது.
-
சம்பா பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரிமியம் தொகை ரூ.512 ஆகும். காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34,500 ஆகும்.
-
இத்திட்டத்தில் சம்பா நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
மேலும் படிக்க...
விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!
Share your comments