1. விவசாய தகவல்கள்

அங்கக தரச்சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Call for farmers to get organic certification!

தஞ்சை மாவட்ட விவசாயிகள், அங்ககத் தரச்சான்று பெற விண்ணப்பம் செய்யலாம் என, மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக்ச சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து, தஞ்சாவூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் செல்வநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ரசாயன விவசாயம் (Chemical farming)

பெருகி வரும் மக்கள் தொகையும், குறுகி வரும் விளைநிலங்களையும் கருத்தில் கொண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ரசாயன இடுபொருட்களையும், உயர் விளைச்சல் தரும் ரகங்களையும் பயன்படுத்தி வருகிறோம்.

பசுமைப் புரட்சி (The Green Revolution)

பசுமைப் புரட்சி செய்து உணவு உற்பத்தி தன்னிறைவு பெற முடிந்தது என்போதிலும், தீவிர உற்பத்தி என்ற பெயரில் ஏராளமான ரசாயன இடுபொருட்களை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

சுற்றுச்சூழலுக்கு கேடு (Harm to the environment)

அவ்வாறு பயன்படுத்தப்படும் பெரும்பாலான ரசாயன பொருட்கள் இயற்கையோடு இயல்பாக இணையாமல் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மாறிவரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது எனலாம்.

அங்கக வேளாண்மை (Organic farming)

எனவே இதற்கு ஒரு மாற்று வழியாக மட்டுமின்றி, நோயற்ற மனித வாழ்விற்கு பேருதவி செய்வதாக அங்கக வேளாண்மை உதவுகிறது.

மாசற்ற வேளாண்மை (Immaculate farming)

மேலும் நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்ய நாம் அங்ககச் சான்று பெறுவது அவசியமாகிறது.

தர சான்றிதழ் (Quality certification)

ஆகவே விவசாயிகள் தாங்கள் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தர சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தரம் உறுதி (Quality Assurance)

இயற்கை விளைவிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படும் முறையில் பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும்பட்சத்தில் அதன் இயற்கைத் தன்மையை உறுதி செய்யப்படுகிறது.

அவ்வாறு தமிழ்நாடு அரசின் விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுகிறது.

ஏற்றுமதி வாய்ப்பு (Export opportunity)

  • இந்த தரச்சான்றிதழ் மூலம் விளைவிக்கப்படும் அங்க விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

  • அங்கக சான்றளிப்பிற்கு தனிநபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • அங்கக விளைபொருட்களை பதன் செய்வோரும், வணிகம் மற்றும் குழுவாகவோ சான்றளிப்பிற்கு தனிநபராகவோ அல்லது விண்ணப்பிக்கலாம்.

  • பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். அங்கக விளைபொருட்களை பதன் செய்வோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.

  • இதற்கான பதிவு கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.2700/- எனவும், பிற விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3700/- எனவும், குழு பதிவிற்கு ரூ.7200/- எனவும், இது நிறுவனங்களுக்கு .9.500/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு (Contact)

மேலும் விரிவானத் தகவல்களுக்கு, தஞ்சாவூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை, 04362-231066 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டுத் தெரிந்து கொள்ளலாம்.

நமது நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அங்கக வேளாண்மையே அச்சாரம். எனவே இனிவரும் காலங்களில் நாம் உண்ணும் உணவே மருந்தாக அமைய இயற்கை விவசாயம் செய்யும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் அங்ககச் சான்று பெற்றுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

தேனீக்கள் அழிந்துவிட்டால், மனிதனின் வாழ்நாள் சொற்ப ஆண்டுகளே- எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

விவசாயத்தை பாதுகாக்க புதிய முயற்சி : தேனீ வளர்ப்பிற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு!

English Summary: Call for farmers to get organic certification! Published on: 13 August 2021, 11:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.