Carbon-dioxide absorbing rock Powder
விவசாய நிலங்களை, கார்பன் டையாக்சைடினை உறிஞ்சும் களங்களாக மாற்றலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி, பாறைகளை பொடியாக்கி, விளை நிலங்களின் மீது தூவுவது, நல்ல தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்.
பாறைப் பொடி கலந்த மண் (Rock Powder)
காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடு தோய்ந்த மழை நீர், பாறைப் பொடி கலந்த மண் மீது விழும்போது, வேதி வினை நிகழும். இதனால் மண் துகள்கள் நாள்படக் கரைந்து பைகார்பனேட்டாக மாறும். பைகார்பனேட் கலந்த மண் மிக வேகமாக காற்றிலுள்ள கார்பன்டையாக்சைடை உறிஞ்சிக் கொள்ளும். மேலும், இது விளை நில மண்ணில் சத்துக்களை அதிகரிக்கும்.
விளைநிலங்களிலிருந்து, மழை நீர் கிளம்பி, நதியில் சேர்ந்து, இறுதியில் கடலில் கலக்கும்போது, அத்துடன் ஏராளமான கார்பன்டையாக்சைடும் செல்லும். இது கடலில் அதிகரித்து வரும் அமிலத் தன்மையை கணிசமாகக் குறைக்கும்.
பாறைகளை பொடியாக்கி விளை நிலத்தில் உரம் போலப் போடுவதை, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கடைபிடித்தாலே பல்லாயிரம் டன் கார்பன்டையாக்சைடினை காற்றிலிருந்து அகற்ற முடியும் என ஷெப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்கள்: மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன்: முதன்மைச் செயலாளர் அறிவிப்பு!
Share your comments