1. விவசாய தகவல்கள்

மாடுகளின் கண்களைத் தாக்கும், கண்புழு நோய்! முன்னெச்சரிக்கையும், தீர்வும்!

KJ Staff
KJ Staff
Credit : Dinamalar

மாடுகளின் கண்களில் ஏற்படும் பாதிப்புகளில், கண் புழு நோயானது (Cataract Eye Disease) ஆண்டின் அனைத்து காலநிலைகளிலும் தாக்கும். கண்வலியால், மாடுகள் சரியாகத் தீவனம் சாப்பிடாமல், பால் உற்பத்தி (Milk production) குறைய நேரிடும். கண்புழு நோயைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்காவிட்டால், புரையோடி கண் பார்வை பறிபோகும் அபாயம் உண்டாகும். கண்புழு நோயைப் பரப்புவதில் ஈக்களும், கொசுக்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நோய் உருவாகும் விதம்:

தெலீசியா (Telsia) மற்றும் செட்டோரியாப் புழுக்களால் (Cetoria worms) இந்நோய் உண்டாகிறது. தெலீசியா புழுக்கள், லார்வா (Larva) எனப்படும் இடைநிலைப் புழுக்கள், கண்களில் சுரக்கும் திரவத்தில் வெளியிடுகின்றன. கண்களைச் சுற்றித் திரியும் ஈக்கள் இந்த லார்வாக்களை உண்ணும் பொழுது, ஈக்களின் வயிற்றில் வளர்ந்து நோய் பரப்பும் தன்மையைக் கொண்ட புழுக்களாக மாறுகின்றன. பிறகு இந்த ஈக்கள், வேறு மாடுகளின் கண்களில் சுரக்கும் திரவத்தை (Liquid) உண்ணும் பொழுது புழுக்களை கண்களில் விடுகின்றன. ஒரு வாரத்திலிருந்து, ஒரு மாதத்திற்குள் முட்டையிட்டு லார்வா எனப்படும் இடைநிலைப் புழுக்களை வெளியிடுகின்றன. தெலீசியா புழுக்கள் கண்களின் இமைகளுக்கிடையே காணப்படும்.
செட்டோரியா புழுவால், பாதிக்கப்பட்ட மாட்டை கடிக்கும் கொசுக்களின் உடம்பிற்குள், லார்வாக்களாக சென்று, நோய் பரப்பும் தன்மையைப் (Transmissibility of the disease) பெறுகின்றன. இந்த கொசுக்கள் மற்ற மாடுகளைக் கடிக்கும் பொழுது மாடுகளின் உடம்பிற்குள் புழுக்கள் சென்று பிறகு கண்களை வந்தடைந்து, பெரிய புழுக்களாக வளரும். இவை, கண்ணின் உட்புறம் காணப்படும். இவ்வாறு ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்கு கண்புழு நோயை ஈக்களும், கொசுக்களும் பரப்பிக் கொண்டே இருக்கும்.

Credit: Dinamalar

நோயின் அறிகுறிகள்:

  • கண்களில் புழுக்கள் இருந்தால், கண் சிவந்து காணப்படுதல், கண்களில் அதிகப்படியான நீர் வடிதல், கண்களில் வீக்கம் (Swelling in the eyes), கண்களில் வெண்படலம் தோன்றுதல், சூரியஒளி பட்டதும் கண்களில் கூச்சம் போன்ற அறிகுறி தென்படும்.
  • புழுக்கள் கண்ணில் உள்ள கருவிழியை உரசுவதால், கண்களில் வெண்படலம் தோன்றுகிறது.
  • புழுக்கள் கண்ணீர் சுரப்பிகளுக்குள்ளும், நாளங்களுக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். இமைகளை விலக்கிப் பார்த்தால் ஓரிரு பெரிய புழுக்கள் கண்களுக்கு உள்ளே நெளிவதைப் (Wrinkle) பார்க்கலாம்.
  • இமைகளுக்கு இடையே புழுக்கள் இருந்தால் அவை மெல்லிய, வெண்மை நிறமுள்ள சிறிய அளவிளான புழுக்கள் அதிக எண்ணிக்கையில் நெளியும்.

சிகிச்சை முறைகள்:

கால்நடை மருத்துவரிடம் காண்பித்தால், மருந்தை கண்களில் ஊற்றி அனைத்துப் புழுக்களையும் வெளியே எடுத்து விடுவார். கண்களின் உட்பகுதியில் புழுக்கள் இருந்தால், உணர்விழக்கச் செய்யும் சொட்டு மருந்தை கண்களில் ஊற்றி வலியில்லாமல் சிறிய அறுவை சிகிச்சை (surgery) மூலம், கண்ணுக்குள் உள்ள புழுக்களை வெளியே எடுத்து விடுவார். புழுக்களை வெளியே எடுத்த பின், ஆன்டிபயாடிக் சொட்டு மருந்தை (Antibiotic drops), ஒரு நாளைக்கு மூன்று வேளையாக 5 முதல் 7 நாட்களுக்கு கண் வெண்படலம், குணமாகும் வரை போட வேண்டும். மீண்டும் புழுக்கள் வராமல் இருக்க லிவாமிசோல் (Livamizole) அல்லது ஐவர்மெக்டின் (Ivermectin) என்னும் மருந்தை பாதிக்கப்பட்ட மாடுகளின் கண்களில் ஊற்ற வேண்டும்.

தடுப்பு முறைகள்:

  • மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்து, ஈக்கள் மற்றும் கொசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • மாட்டுச் சாணத்தை வெளியே சற்றுத் தொலைவில், சேமிப்புக் கிடங்கில் (Storage warehouse) கொட்ட வேண்டும்.
  • சேமித்த சாணத்தில் (Dung) ஈக்கள் மற்றும் கொசுக்களின் முட்டைகள் மற்றும் லார்வாக்களை அழிக்க வாரம் ஒருமுறை மருந்து தெளித்தல் வேண்டும்.
  • மாடுகளை நன்கு குளிப்பாட்டி, சுத்தமாக வைக்க வேண்டும்.
  • கொட்டகையைச் சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:

பேராசிரியர் உமாராணி
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்,
திருப்பரங்குன்றம்
0452 - 2483 903.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

சேலம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கால்நடை சந்தையை, மீண்டும் துவக்க கோரிக்கை!

வாழையில், வாடல் நோயைக் கட்டுப்படுத்தி, விளைச்சலை அதிகரிப்பது எப்படி?

English Summary: Cataract Eye Disease! Precautions and Solution! Published on: 10 October 2020, 12:05 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.