1. விவசாய தகவல்கள்

சினை நிற்காமல் போன கால்நடைகள்! சினை நிற்க இயற்கை மருத்துவம்!

KJ Staff
KJ Staff

Credit : Pannaiyar

இன்றைக்கு இருக்கும் அவசர உலகத்துல மாடு சினை நிற்கவில்லை என்றால், உடனே விற்க போயிடுகிறோம். அது என்ன செய்யும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளித்த தீணி தான் போடுறோம், தீவணம் (Fodder) என்ற பெயரில் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்ன கூட சேர்க்கிறார்கள் என்று நிஜமா நமக்கு தெரியுமா? இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை (Infertility) வருகிறது. இருந்தாலும் புதிதாக கறவை மாடு (cow) வாங்குவதற்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு, மாட்டை கீழ்க்கண்ட சிகிச்சையை செய்து, அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

 1. வெள்ளை முள்ளங்கி.
 2. கற்றாளை துண்டு
 3. முருங்கை இலை
 4. பிரண்டை (தண்டு)
 5. கறிவேப்பிலை
 6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

 1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை (Radish) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். (நாள் 1 -5)
 2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை (Aloevera) முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)
 3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை (Drumstick leaf) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)
 4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)
 5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை (Curry leaves) உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு, (பெரிதாக இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு. கடையில் வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்.) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

தகவல் : பேராசிரியர் திரு. புண்ணியமூர்த்தி

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாய நிலங்களில் மலட்டுத்தன்மையைத் தடுப்பதற்கான தமிழரின் ஆராய்ச்சி! சீனா நிதியுதவி!

பட்டுப்புழு வளர்ப்பில் அசுத்தும் இளைஞர்! பன்மடங்கு இலாபம்!

English Summary: Cattle that did not stop milking! Natural medicine to catch the chin!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.