வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)
தமிழகத்தில் 1.5 கிலோமீட்டர் உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
12.05.21
இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy Rain)
நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
13.05.2021
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், வேலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை (Heavy Rain)
நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வறண்ட வானிலை (Dry Weather)
ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை முன்னறிவிப்பு
தென் மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டஙகளில் அதிகபட்சவெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மழைபதிவு (Rainfall)
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் குழித்துறையில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
12.05.21
தென் மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
13.05.21
-
குமரிக்கடல்பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில்வீச வாய்ப்பு உள்ளது.
-
தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
வரும் 14ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்துவு பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
14.05.21
மத்திய தெற்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது, 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீன்பிடிக்கத் தடை (Prohibition of fishing)
எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!
மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!
தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!
Share your comments