1. விவசாய தகவல்கள்

அரபிக்கடலில் சூறாவளிக் காற்று- 5 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

Credit : Hindu Tamil

மத்தியத் தெற்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)

தென் தமிழகம் மற்றும் அதளை ஒட்டியப் பகுதியில், 1.5கிலோமீட்டர் உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

10.05.21

இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் விருதுநர், புதுக்கேட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, தென்காசி, தருமபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை (Heavy Rain)

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை(Dry Weather)

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வானிலை முன்னறிவிப்பு (Weather forecast)

11.05.21

இலேசான மழை (Light rain)

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வறண்ட வானிலை (Dry Weather)

  • ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

  • கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (RH-Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

வெப்பநிலை முன்னறிவிப்பு (Temperature forecast)

11.05.21 முதல் 13.05.21 வரை மேற்கு, வடமேற்கு திரையில் இருந்துத் தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழகக் கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

அதிகமாக வியர்க்கும் (Excessive sweating)

  • காற்றின் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என்பதால், மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கவும் செய்யும்.

  • தேவைக்கு ஏற்ப குடிநீர், இளநீர், மோர் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும்.

ஆடைகள் (Dress)

வெள்ளை மற்றும் வெளிர் வண்ணம் கொண்ட (Light colour) கதர் அடைகளை அணிவது சிறந்தது.

மழைபதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் இரணியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

10.05.21 முதல் 12.05.21

மத்திய தெற்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

13.05.21

மத்திய தெற்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது, 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.

14.05.21

மத்திய தெற்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது, 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீன்பிடிக்கத் தடை (Prohibition of fishing)

எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

டென்ஷனில்லாமல் பென்சன் வாங்கனுமா? ரூ.74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்!

தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராவது?

SBI-யின் அதிரடி ஆஃபர்! பிரிமியமே இல்லாமல் ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ்!

English Summary: Echo of hurricane force winds in the Arabian Sea - Fishing ban for 5 days

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.