1. விவசாய தகவல்கள்

இந்த இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- முழு விபரம் உள்ளே!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Chance of heavy rain in most of these districts- full details inside!

வளி மண்டல சுழற்சி காரணமாக, தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய தமிழக கடற்பகுதிகளில் 5.8 கிலோமீட்டர் உயரம்வரை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

05.10.2021

மிக கனமழை (Very Heavy rain)

சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யக்கூடும்.

கனமழை (Heavy rain)

அதேநேரத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோயம்புத்தார், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

06.10.2021

கன மழை (Heavy rain)

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனீ, அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழை பதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனீ மாவட்டம் வீரபாண்டியில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)

தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று, சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

பூச்சிமருந்து மற்றும் பூஞ்சான மருந்துகள் பாதுகாப்பு மசோதா - ஒரு பார்வை!

யாருக்கு இல்லை செல்ஃபி மோகம்- 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய அதிசயம்!

English Summary: Chance of heavy rain in most of these districts- full details inside! Published on: 05 October 2021, 10:15 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.