வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மேலடுக்கு சுழற்சி (Overlay rotation)
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தெற்கு உள் மாவட்டங்களில் இலேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையும் நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
17.01.21
தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.
-
காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.
-
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
அதிகபட்ச மழைஅளவு (Maximum rainfall)
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
மீனவர்களுக்கு முன் எச்சரிக்கை ஏதுமில்லை.
வடகிழக்கு பருவமழை, தென் மாநிலங்களில் இருந்து வரும் 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்!
நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் - விவசாயிகள் கவனத்திற்கு!
பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!
Share your comments