தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வளிமண்டல சுழற்சி (Atmospheric cycle)
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி காரணமாக இன்று, கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
26.02.21 முதல் 1.3.21 வரை
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை (Chennai)
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)
மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
எனினும், கோடை வெயிலின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.
மதிய வேளையில் வெளியில் செல்வதைத் தடுத்தால், பல நோய்களுக்கு ஆளாகாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க....
9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்- தமிழக முதல்வர் அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் மத்திய குழு விரைவில் ஆய்வு!
பசுக்களைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பசு அறிவியல் தேர்வு!
Share your comments