இந்தியா முழுவதும் தென்னை நார் மற்றும் தென்னை நார் சார்ந்த தொழிற்சாலைகள் 23 ஆயிரத்திற்கும் மேல் 14 மாநிலங்களில் இயங்கி வருகிறது. அதில் முதன்மை மாநிலமாக திகழ்வது நமது தமிழகமாகும். தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
125 நாடுகளுக்கு 250-க்கும் மேற்பட்ட தென்னை நார் பொருட்கள் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யப்பட்டு 2000 கோடி அன்னியச் செலாவணியை, இந்த தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்திற்கு வருவாய் கிடைக்க வழி வகை செய்கிறது.
இதைத்தவிர 12 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு தேவைகளுக்கான தென்னைநார் சம்பந்தப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு 30 மாநிலங்களுக்கு விற்கப்படுகிறது.
தென்னை நார் தொழிற்சாலைகளின் மூலமாக அதிகப்படியான கிராமப்புற பெண்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் 27 மாவட்டங்களில், இந்தத் தொழில் விரிவடைந்து உள்ளது.
தேங்காய்க்கு மேலுள்ள மட்டையை நம் இயந்திரங்கள் மூலமாக அடிக்கும் பொழுது அதிலிருந்து கிடைக்கும் தென்னை நார் 30%. மீதி 70 விழுக்காடு கோகோ பீட் கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
தென்னை நார் மூலமாக செய்யப்படும் கால் மிதிகள், ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மரப்பலகைகள், இயற்கை சார்ந்த தோட்டக்கலை பொருட்கள், வீட்டு சாதன பொருட்கள், குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள், இயற்கைக்கு உகந்ததாகவும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உள்ளதாலும் மக்கள் மனதில் தென்னை நார் பொருட்களுக்கு, எப்பொழுதும் ஒரு தனி இடம் உண்டு.
பருவநிலை மாற்றம் மிகக் கொடூரமாக உலகத்தில் இயற்கையை பாதித்துக் கொண்டிருக்கும் வேளையிலே தென்னை நார் பொருட்களை உபயோகப்படுத்தி, இயற்கையை காக்க வேண்டியது தனிமனிதர்களாக ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு உண்டு.
வெளிநாடுகளில் செய்யப்படும் மண்ணில்லா விவசாயத்திற்கு கோகோ பீட் மிக உபயோகப்படுத்தப்படுகிறது.
நூற்றி இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் நம்மிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும். கோகோபீட் வைத்தே 45 விழுக்காடுகளுக்கு மேல் மண்ணில்லா விவசாயம் மூலம் இயற்கை காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர்.
மேலும் படிக்க: PM Kisan:13வது தவணை பெறவில்லையா? இந்த எண்களை அழைக்கவும்
கோகோபிட்-ஐ மண்ணில்லா விவசாயத்திற்கு உபயோகப்படுத்துவதன் மூலமாக 70% தண்ணீரையும் 60 விழுக்காடுகளுக்கு மேல் உர செலவையும் குறைக்க முடியும்.
கடந்த 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இயற்கை விவசாயத்திற்கு மண்ணில்லா விவசாயத்திற்கு கோகோபீட் உபயோகப்படுத்துவதன் மூலமாக அவர்களுடைய காய்கறி ,பூ வகை, பழ வகைகளை ஏற்றுமதியும் செய்கின்றனர்.
கோகோ பீட் இயற்கைக்கு எந்த விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது.
அதனால் மேலைநாடுகளில் பகுப்பு நிலத்தை நல்ல நிலமாக பயன்படுத்துவதற்கும், இந்த கோகோ பீட் உபயோகப்படுத்துகின்றனர்.
நிழல் குடை விவசாயம் செய்வதன் மூலமாக பருவநிலை மாற்றத்தில் இருந்து நமது விவசாய பெருங்குடி மக்கள் தங்களுடைய பயிர் வகைகளை காக்க முடியும்.
நிழல்குடில் விவசாயத்தில் மிக நல்ல முறையில் மேலைநாடுகளில் கோகோ பீட் உபயோகப்படுத்தப்படுகிறது.
தென்னை நார் மூலமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் செய்யப்பட்டு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் உபயோகப்படுத்த முடியும்.
மிக முக்கியமாக பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பல இடங்களில் தென்னைநார் உபயோகப்படுத்தப்படுகிறது.
இது பல ஆராய்ச்சிகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டு, இப்பொழுது மக்கள் புழக்கத்தில் மேலைநாடுகளில் உள்ளது.
1953-ஆம் ஆண்டு மத்திய அரசால் கயிறு வாரியம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
2022ஆம் ஆண்டு தமிழக அரசினால், இந்தத் தொழிலை மேம்படுத்துவதற்கு கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு கயிறு மேம்பாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உதவிகள் மாநில அரசினால் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக பொருளாதார வீழ்ச்சி உலக பண புழக்கம் இல்லாமை போன்றவற்றால், இந்த தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு 40 விழுக்காடுக்கு மேற்பட்ட
தொழிற்சாலைகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைகள் மூலமாக தென்னை விவசாயிகளுக்கு ஒரு மட்டைக்கு போன வருடம் இரண்டு ரூபாய் 50 பைசா கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது 50 பைசா மட்டுமே கொடுத்து வாங்க முடிகிறது.
2012ஆம் ஆண்டிற்கு பின், இந்த தொழிற்சாலைகள் இப்பொழுது மிக கடுமையான நெருக்கடியில் உள்ளது.
மத்திய மாநில அரசால், இதை உணர்ந்து இத்தொழிற்சாலைகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கினால், 2030ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலை, அடுத்த கட்டத்தை எட்டும்.
தகவல்:
S.K.Gowthaman
Coir Consultant -UNDP
Vice President -South India
People Forum of India -GOI
Advisory Committee Member -TANCOIR, GOT
President,
National Coir Federation, India. Mob No: +91 94431 36451
மேலும் படிக்க:
Good News: விரைவில் வங்கி ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும்!
Share your comments