1. விவசாய தகவல்கள்

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னை டானிக் விற்பனைக்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Coconut tonic for sale at the Agricultural Science Center!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்கும் தென்னை டானிக் விற்பனைக்குத் தயாராக உள்ளதாக வேளாண்துறைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

டெல்டாவில் சாகுபடி (Cultivation in the Delta)

காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை, இறவை மற்றும் மானாவாரிப் பயிராக பயிரிடப்படுகிறது.

பொருளாதார இழப்பு (Economic loss)

கஜா மற்றும் புரெவி புயலால் பல மரங்கள் முறிந்தும், சாய்ந்து விழுந்தும் அழிந்துவிட்டன. மீதமுள்ள மரங்கள் பல இடங்களில் சரியாக பராமரிக்காமல் குறைந்த மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், குறைந்த மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து (Nutrition)

தென்னையில் குரும்பை வைத்தல், குரும்பை அனைத்தும் உதிராமல் காய்களாக மாறவும், திரட்சியான தேங்காய்கள் கிடைக்கவும், ஊட்டச் சத்துக்கள் மற்றும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியமாகும்.

இதைத் தவிர குரும்பை உதிராமல் தடுக்க கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பிரத்யேகமாக கண்டுபிடிக்கப்பட்ட தென்னை டானிக் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டு வருகிறது.

தென்னை டானிக் விற்பனை (Sale of coconut tonic)

விவசாயிகளுக்கு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் இந்த தென்னை டானிக் அண்மை காலமாக விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

பயன்படுத்துவது எப்படி? ( How to use)

ஒரு லிட்டர் தென்னை டானிக்குடன் 4 லிட்டர் நீர் சேர்த்து ஒரு மரத்துக்கு 200 மில்லி வீதம் 25 மரங்களுக்கு வேரில் பாலிதீன் பையைக் கொண்டு கட்ட வேண்டும். ஓராண்டுக்கு மேல் உள்ள அனைத்து மரங்களுக்கும், மரத்திலிருந்து இரண்டு அடி தள்ளி மண்ணைத் தோண்டும் போது கிடைக்கும் இளம் வேர்களில் கத்தியைக் கொண்டு சீவி, தென்னை டானிக் பாக்கெட்டை உள்ளே நுழைத்து கட்டி விடவேண்டும்.

பயிர் எடுத்துக்கொள்ளும் (Crop intake)

  • வறட்சியாக இருக்கும் போது ஓரிரு நாள்களில் இந்த மருந்து மரத்தால் உறிஞ்சப்பட்டு பயிர் எடுத்துக் கொள்கிறது.

  • 6 மாதங்களுக்கு ஒரு முறை இதைப் பயன்படுத்தும் போது, தென்னை இலைகள், ஓலைகள் உள்ளிட்டவைக் கரும் பச்சை நிறமாக மாறி குரும்பை உதிராமல் வாளிப்பான காய்களைத் தரமுடியும்.

விலை ரூ.309 (Price Rs.309)

ஒரு லிட்டர் விலை ரூ.309. ஒரு லிட்டர் வாங்கும் போது 25 மரங்களுக்கு அதைக் கட்ட முடியும். தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

உலக பூமி தினம்! பிளாஷ்டிக்கை தவிர்த்து, நம் பூமியை மீட்டெடுப்போம்!

கோடையில் உடல் நலம் காக்கும் கீரைகள்! ஆர்வத்துடன் உழைக்கும் விவசாயிகள்

தேயிலை செடிகளை தாக்கும் சிவப்பு சிலந்தி நோய்! விவசாயிகள் கவலை!

English Summary: Coconut tonic for sale at the Agricultural Science Center! Published on: 09 May 2021, 08:31 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.