தென்னை நார்க் கழிவிலிருந்து மக்கும் உரம் தயாரித்து அதனை நிலங்களில் பயிர்களுக்கு உரமாக போட்டு விளைச்சல் அதிகரிக்கலாம், எனவே இதைப் பற்றிய முழுமையான தகவலை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேங்காய் நார் உரம்:
∆ தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். இதிலிருந்து நார் பிரித்தெடுக்கப்படுகிறது. பிரித்தெடுக்கும் போது, நார் கழிவுகள் கிடைக்கின்றன.இவைகள் தென்னை நார்க் கழிவுகள் என்றழைக்கப்படுகின்றனர்.
∆ நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்கழிவுகள் என்றழைக்கப்படுகின்றன. நம் இந்திய தென்னை நார் தொழிற்சாலைகளிலிருந்து, 7.5 மில்லியன் டன் அளவிலான நார்க்கழிவுகள் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறுகிறது.
∆ தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 லட்சம் டன் நார்க்கழிவுகள் கிடைக்கிறது. இதிலுள்ள மூலப்பொருள்களால், இது தோட்டக்கலையில் வளர்தளமாக பயன்படுகிறது.
தென்னை நார்க்கழிவு உரம் தயார் செய்தல்
பண்ணை கழிவான தென்னை நார்கழிவு கொண்டு ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரித்தல்.
தேவையான பொருட்கள்:
1000 கிலோ தென்னை நார்க்கழிவு, 5 கிலோ யூரியா, 5 பாட்டில் புளூரோட்டஸ், காளான் விதை, தண்ணீர்.
மேலும் படிக்க: தேனீ உங்கள் நண்பன், எப்படி தெரியுமா? விளக்கும் வேளாண் மாணவிகள்
செய்முறை:
- நிழல் தரக்கூடிய சமப்படுத்தப்பட்ட தரைப்பகுதியில் 5*3 மீ அளவுடைய இடத்தை தேர்வு செய்ய வேண்டும். முதலில் 100 கிலோ நார்க்கழிவை முதல் படுக்கையாக பரப்ப வேண்டும். பிறகு 1 பாட்டில் பூஞ்சாண விதைகளை முதல் படுக்கையின் மேல் சீராக தூவவேண்டும்.
- அதன்மேல் 100 கிலோ நார்க்கழிவை இரண்டாவது படுக்கையாக பரப்ப வேண்டும். 1 கிலோ யூரியாவை இதன் மேல் சமமாக தூவவேண்டும். இவ்வாறாக பூஞ்சாண விதை மற்றும் யூரியாவை அடுத்தடுத்து 100 கிலோ நார்க்கழிவுடன் சேர்த்து அடுக்க வேண்டும்.
- இதனுடன் தண்ணீரைச் சேர்த்து ஈரப்பதம் 50-60 சதம் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். இதன் உயரம் 1மீ வரை இருக்க வேண்டும். இரண்டு மாதங்களில் கம்போஸ்ட் தயாராகிவிடும். ஈரம் 50 சதத்திற்கும் குறையும் பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும். முடிவில் தென்னை நார்க்கழிவு முழுவதும் மக்கி கருப்பு நிற தொழு உரமாக மாறிவிடும்.
- தென்னை நார் கழிவு எளிதில் மக்காத பொருட்களான லிக்னின் 30 சதம் மற்றும் செல்லுலோஸ் 20 சதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவற்றை மக்கக்கூடியதாக மாற்ற பூஞ்சாண விதை மற்றும் யூரியா தேவைப்படுகிறது.
மக்கிய தென்னை நார் உரம் நன்மைகள்:
- மக்கிய தென்னை நார்த் தூளைச் சேர்ப்பதால் மண்ணின் அமைப்பு, அமைப்பு மற்றும் உழவு மேம்படுகிறது, மணற்பாங்கான மண் மிகவும் கச்சிதமாகிறது மற்றும் களிமண் மண் அதிக விளைச்சலுக்கு ஏற்றதாகிறது. இது நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்துகிறது (அதன் உலர் எடையை விட 5 மடங்கு அதிகமாக) மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவுகிறது.
- சிறந்த ஈரப்பதம் தக்கவைத்தல் மற்றும் நல்ல காற்றோட்ட குணங்கள் காரணமாக, தென்னை நார் மரக்கறி வீட்டு தாவரங்களுக்கு சிறந்த வளரும் ஊடகமாகும். உட்புற தாவரங்களுக்கு தளர்வான மற்றும் திறந்த அமைப்பில் ஒரு மண் தேவைப்படுகிறது, இது தண்ணீர் சுதந்திரமாக சிதறுவதையும், காற்று சுழற்றுவதையும் உறுதி செய்யும்.
மேலும் விவரங்களுக்கு:
செல்வி செ. சக்திபிரியா, இளங்கலை வேளாண் மாணவி மற்றும். முனைவர்.பா.குணா, இணைப் பேராசிரியர், நாளந்தா வேளாண்மைக் கல்லூரி, M.R.பாளையம், திருச்சிராப்பள்ளி. மின்னஞ்சல்: baluguna8789@gmail.com
தொலைபேசி எண் : 9944641459 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க:
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகம் அடுத்த வாரம் பாதிப்பு! ஏன்?
ஜீவாமிர்தத்தின் மகத்துவம் பற்றி விளக்கும் வேளாண் கல்லூரி மாணவர்
Share your comments