உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
உழவர் நல நிதி பாதுகாப்புத் திட்டம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 1 மெ.டன் நெல் அல்லது அதற்கு சமமான மதிப்பில் இதர விளைபொருட்களை விற்பனை செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு விபத்து அல்லது பாம்பு கடித்து உயிாிழக்கும் நபருக்கு அதிகபட்சம் ரூ.1 இலட்சம் மற்றும் விபத்தினால் ஒரு கால், இரு கை, இரு கண் ஆகியவை இழந்தால் அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.
மேலும் ஒரு கால், ஒரு கை, ஒரு கண் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு ஊனம் ஏற்பட்டால் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர விவசாயிகள் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
பருத்தி மறைமுக ஏலம்:
திருவாரூர் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கும் திருவாரூர், பூந்தோட்டம், வலங்கைமான், குடவாசல் மற்றும் மன்னார்குடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் வாரந்தோறும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது.
பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை திருவாரூர் மற்றும் பூந்தோட்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், பிரதி வாரம் புதன்கிழமை குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், பிரதி வாரம் வெள்ளிக்கிழமை வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும், பிரதி வாரம் சனிக்கிழமை மன்னார்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது. ஆகையால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை மறைமுக ஏலத்தில் வைத்து எவ்வித கட்டணமின்றி சரியான எடையில் நல்ல விலைக்கு விற்று பயனடையுமாறு திருவாரூர் விற்பனைகுழு செயலாளர் கேட்டுக்கொள்கிறார்.
நேரடியாக தேங்காய் மட்டை விற்பனை:
ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திலேயே அனைத்து வேளாண் விளைபொருட்களும் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த பவானி என்கிற விவசாயி சுமார் 3000 மட்டைத் தேங்காயை, மட்டைத் தேங்காய் ஒன்றுக்கு ரூபாய் 10 வீதம்; மொத்த மதிப்பு ரூபாய் 30,000-க்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட பணியாளர்கள் மூலம் எந்தவித ஏற்றுக்கூலி, இறக்குக்கூலியும் இல்லாமல் விற்று பயனடைந்தார்.
இதே போல் விவசாயிகளின் இடத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் சென்று வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்ற விவரம் ராமநாதபுரம் விற்பனைக்குழு சார்பாக பெருமையுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து விவசாயிகளும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை அணுகி தங்களது விளை பொருட்களை விற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
மேலும் காண்க:
ஆக-31 க்குள் ஆதார் இணைப்பு கட்டாயம்- தவறினால் சம்பளம் கட்
Heavy rain warning: இன்று மட்டும் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Share your comments