பயிர் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது மண் வளம். அந்த மண்னை பொண்ணாக்குவது உயிர் உரங்கள் (Bio-Fertilizers), இவை செயல்திறனுள்ள நுண்ணுயிரிகள் அடங்கிய கலவையாகும். இயற்கையாகவே, மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் ஆற்றில் குறைவாகவே இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிர்களைப் பெருக்கி, மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்திறை அதிகப்படுத்தலாம். பொதுவாக இந்த நுண்ணுயிர்கள் வளிமண்டல மற்றும் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை பயிர்கள் கிரகித்துக்கொள்ள உதவுகிறது.
உயிர் உரங்களின் பல்வேறு வகைகள்
ரைசோபியம் - Rhizobium
மண்ணில் வாழக்கூடிய ஒரு வகை நுண்ணுயிரி ரைசோபியம். இந்த நுண்ணுயிரி பயறு வகை பயிர்களில் வேர்களைத் தாக்கி, வேர் முடிச்சுகளை உற்பத்தி செய்யும். வேர் முடிச்சில் உள்ளே மூலக்கூற்று தழைச்சத்தை அம்மோனியாவாக மாற்றி பயிர்களுக்கு பயன்படுத்தும் விதமாக தருகிறது. இது ஏழு பேரினங்களைக் கொண்டது.
அசட்டோ பாக்டர் - Acetobacter
இது தன்னிச்சையாக வாழும். காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைப்படுத்துகிறது. இது உயிர் உரமாக பயறுவகை அல்லாத பயிர்களுக்கு முக்கியமாக நெல், பருத்தி, காய்கறி மற்றும் பல பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அசட்டோ பாக்டர் உயிரணுக்கள் வேர்சூழ் மண்டலத்தில் அதிகளவில் இருக்கும்.
அசோஸ்பைரில்லம் - Azospirillum
ஒரு ஹெக்டேருக்கு 20 – 30 கிலோ தழைச்சத்தை வேர்சூழ் மண்டலத்தில் பயிறு வகை அல்லாத பயிர்களான நெல், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் பலவற்றில் நிலை நிறுத்துகிறது. பல பயிர்களில் முக்கியமாக நெல், சிறு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்து ஆகியவற்றில் அதிகளவில் வேர்கள் உருவாக ஊக்குவிக்கின்றன.
அசோஸ்பைரில்லம் உட்புகுத்தலால் 25-30 சதவீத அளவு தழைச்சத்து பயன்பாட்டைக் குறைக்கலாம்.
அசோலா - Azolla
அசோலா தண்ணீரில் தன்னிச்சையாக மிதக்கக்கூடிய பெரணியாகும். இது காற்றிலுள்ள தழைச்சத்தை நீலப்பச்சைப் பாசியான அனபீனா அசோலாவுடன் இணைந்து நிலைப்படுத்துகிறது. நஞ்சை நிலத்தில் விளையும் அசோலா உயிர் உரமாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஹெக்டேருக்கு 40 – 60 கிலோ தழைச்சத்தை நெல் பயிருக்கு தருகிறது.
உயிர் உரங்கள் பயன்படுத்தும் விதம் - How to use Bio -Fertilizers
ரைசோபியம்
அனைத்துவகை பயிறு வகைகளுக்கும் ரைசோபியம் விதை நேர்த்தி பொருளாக பயன்படுத்தலாம்.
அசோஸ்பைரில்லம் , அசட்டோ பாக்டர்
-
நடவு நட்ட பயிர்களில் அசோஸ்பைரில்லம் விதை, நாற்றுக்களின் வேர்க்குளியல், மண் அளிப்பு முறைகள் வழியே செலுத்தலாம்.
-
நேரடியாக விதைக்கும் பயிர்களில் அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி மற்றும் மண் அளிப்பு முறை வழியே அளிக்கப்படுகிறது.
பாஸ்போபாக்டீரியா
-
விதை, நாற்றுக்களின் வேர் குளியல், மண் அளிப்பு முறைகள் வழியே செலுத்தலாம்.
-
பாஸ்போபாக்டீரியாவை அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியத்துடன் கலக்கலாம். நோய் தடுப்பு காரணிப் பொருள் சரி அளவில் கலந்து மேற்குறிப்பிட்ட முறைகள் மூலமாக பயிர்களுக்கு அளிக்கலாம்.
-
அசோஸ்பைரில்லத்துக்கு பாரிந்துரைக்கப்பட்ட அளவே பாஸ்போபாக்டீரியா நோய் தடுப்பு காரணிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறியவற்றுடன் பொட்டாஷ் சத்தினையும், ஜிங்க் சத்தியையும் கரைக்க கூடிய உயிர் உரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தினால் இரசாயன உரப் பயன்பாட்டினை கணிசமாகக் குறைத்து பயிர் உற்பத்தியை பெருக்கிடலாம்.
டாக்டர் க.வேங்கடலட்சுமி, உதவி பேராசிரியர்
வேளாண் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
ஈச்சங்கோட்டை, தஞ்சாவூர்
மேலும் படிக்க...
PMKSY:சொட்டுநீர் பாசனப் பள்ளம் அமைக்க ரூ.6ஆயிரம் வரை மானியம்
Share your comments