கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளைக் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது.
தளர்வில்லா ஊரடங்கு (Relaxing curfew)
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தளர்வு (Relaxation)
அதேநேரத்தில் விவசாயப் பணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, வேளாண் பணிகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாநிலம் முழுதும், நெல், உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி நடந்து வருகிறது
கொட்டித்தீர்த்த கனமழை (Heavy rain pouring down)
யாஸ் புயல் காரணமாக பல மாவட்டங்களில் சமீபத்தில், பருவமழை கொட்டியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டிய மழையால், ஆறுகள், ஏரிகள், குளங்கள் வழியாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல மாவட்டங்களில் பயிர் சேதம் (Crop damage in several districts)
இதன் காரணமாக கன்னியாகுமரி மட்டுமின்றி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்டங்களிலும் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
அறிக்கை அளிக்க உத்தரவு (Order to report)
இந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் உத்தர விட்டுள்ளனர்.
கணக்கெடுக்கும் பணி (Survey work)
இதையடுத்து, மாவட்ட வேளாண் இணை துணை இயக்குனர்கள் வாயிலாக, பயிர் சேதங்களைக் கணக்கெடுக்கும் பணிகளைத் தோட்டக்கலைத்துறையினர் துவங்கினர்.
சேதம் கணக்கீடு (Damage calculation)
கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடத்தப்பட்ட, முதற்கட்ட ஆய்வில், 1,647 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், 526 ஏக்கர் வேளாண் பயிர்களும் தேசமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சரிடம் அறிக்கை (Report to the Minister)
இந்த அறிக்கை விரைவில், வேளாண் துறை செயலர் வாயிலாக, அமைச்சரிடம் சமர்பிக்கப்பட உள்ளது. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
விற்க முடியாமல் கொடியிலேயே அழுகும் கிர்ணி பழங்கள்! இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
ஒன்றிணைந்த விவசாயிகள்! காய்கறி உற்பத்தி நிறுவனம் மூலம் விற்பனை!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
Share your comments