சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 2 லட்சம் அவரவர் வாங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.மதுருதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பபட்டிருப்பதாவது :
கடந்த 2019-2020ம் ஆண்டில் காப்பீடு பதிவு செய்து இழப்பீடு தொகை பெறாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடு தொகையைப் பெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளைத் தந்துள்ளது.
ரூ.10 கோடி (Rs. 10 Crore)
இந்த நடவடிக்கைகளால், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து (Oriental Insurance Company) ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது.
ரூ.1.12 கோடி (Rs.112 Crore)
அதில் இருந்து முதற்கட்டமாக ரூ.1.12 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பில் பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தருவதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!
சூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி?
Share your comments