1. விவசாய தகவல்கள்

தரிசு நிலத்தில் சீத்தாப்பழ மரம் பயிரிட்டு ரூ. 40 லட்சம் ரூபாய் சம்பாத்தியம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Cultivation of custard apple in barren land to earn Rs. 40 lakh rupees !

பாரம்பரிய விவசாயத்தை விட, மகாராஷ்டிரா விவசாயிகள் தோட்டக்கலை விவசாயத்தின் பக்கம் திரும்புகின்றனர். மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தில் இருந்தும் இதுபோன்ற செய்திகள் வெளியாகியுள்ளன. 6 ஏக்கர் தரிசு நிலத்தில் சீதாபழம் சாகுபடி செய்துள்ளார்.

விவசாயி பால்கிருஷ்ணா நாம்தேவ் யெல்லாலே இன்று ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார். சோயாபீன் சாகுபடியை விட, சீதாப்பழம் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாகவும், அதன் சாகுபடியால், 2 ஆண்டுகளில் 40 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயி பால்கிருஷ்ணா கூறுகிறார். மகாராஷ்டிராவில் சீதாப்பழம் சாகுபடி பெரிய அளவில் செய்யப்படுகிறது. பீட், ஜல்கான், அவுரங்காபாத், பர்பானி, அகமதுநகர், நாசிக், சோலாப்பூர், சதாரா மற்றும் பண்டாரா மாவட்டங்களில் சீதாபழம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

சீதாப்பழம் சாகுபடியை விவசாயி எப்போது தொடங்கினார்?

மகாராஷ்டிராவின் லத்தூர் மாவட்டத்தின் சகுர் தாலுகாவின் ஜன்வால் கிராமத்தில் வசிக்கும் பால்கிருஷ்ணா நாம்தேவ் யெல்லாலே, 2013-ல் பயிரிடத் தொடங்கியதாகக் கூறுகிறார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மரக்கன்றுகள் நடப்பட்டன. இவர் தனக்கு சொந்தமான தரிசு நிலத்தில் 6 ஏக்கரில் சீதாப்பழம்  சாகுபடி செய்துள்ளார். 2019ல் இருந்து உற்பத்தி துவங்கியதாக கூறுகிறார். எனவே 2020 சீசனில், அவர் ஒரு ஏக்கருக்கு 2.5 லட்சம் சம்பாதித்தார்.

சோயாபீனை விட சீதாப்பழம் சாகுபடியில் அதிக லாபம் கிடைக்கிறது என்கிறார் பால்கிருஷ்ணா. பாலகிருஷ்ணா 2 லட்சம் செலவில் தொடங்கிய இப்பழத் தொழிலில் இன்று 15 லட்சத்துக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார். இதுவரை 40 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு என அனைத்து மாநிலங்களின் சந்தைகளிலும் பால்கிருஷ்ணா தனது பொருட்களை விற்பனை செய்கிறார்.

சீதாப்பழம் எம். கே 1 கோல்டு இனத்தின் பண்புகள் என்ன?

சீதாப்பழம் ரகங்களில், எம்கே 1 கோல்டனின் சிறப்பு என்னவென்றால், இந்த பழம் தோற்றத்தில் அழகாக இருப்பது மட்டுமின்றி, விவசாயிகளும் குறைந்த தண்ணீரில் அதிக விளைவிக்கலாம். இந்த இனத்தின் பழங்கள் நீண்ட காலம் நீடிக்கும். அந்த பயிரின் எடை 400 கிராம் முதல் 500 கிராம் வரை இருக்கும், தற்போது விவசாயிகள் சீதாப்பழம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

மாநில அரசு தற்போது தோட்டக்கலை பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மராத்வாடாவின் தரூர் மற்றும் பாலகாட் கிராமங்கள் சீதாப்பழத்திற்கு புகழ் பெற்றவை. 1990-91 முதல் தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடர்பான தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உலர் பழ மரங்கள் வளர்ப்பில் சீதாப்பழம் சேர்க்கப்பட்டுள்ளது.

எனவே இது சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக உள்ளது. மகாராஷ்டிராவில் 1990-91 முதல் இந்தத் திட்டத்தின் கீழ் 25906 ஹெக்டேர் பரப்பளவில் சீதாப்பழம் வெற்றிகரமாக பயிரிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 

சீதாப்பழம் நீரிழிவு மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்றதா ?

English Summary: Cultivation of custard apple in barren land to earn Rs. 40 lakh rupees ! Published on: 29 October 2021, 12:10 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub