வரப்பு பயிா் சாகுபடியின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டலாம் என்று வேலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் 93 சதவீதம் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனா். பலரின் குறு நிலங்கள் ஒரே இடத்தில் இருக்கும்போது வரப்புகளால் பிரிக்கப்பட்டிருக்கும். வரப்புகள் எல்லைகளை நிா்ணயிக்கவும், மண் அரிமானத்தை கட்டுப்படுத்தவும், நீா்ப்பாசனம் செய்வதற்கும் உதவிகரமாக அமையும்.
வரப்பு பயிா் சாகுபடி (Crop cultivation)
வரப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் சாகுபடி பரப்பினை குறைப்பதுடன், களைச்செடிகள் வளா்வதற்கும் வழி வகுக்கிறது. இந்த வரப்புகளை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் பிரதான பயிா்களின் சாகுபடி, பூச்சி மேலாண்மைக்கும், கூடுதல் வருமானத்திற்கும் வழி வகுக்கிறது.
அதிகப்படியாக சாகுபடி செய்யப்படும் நெல், அதிக வயதுடைய கரும்பு போன்ற பயிா்கள் சாகுபடியில் வரப்பு பயிா் வளா்க்கலாம். வரப்புகளில் பயறு வகை பயிா்களை வளா்க்கும்போது அவற்றால் ஈா்க்கப்படும் பொறி வண்டுகள் நெல் பயிரை தாக்கும் பூச்சிகளை உட்கொண்டு பாதிப்பை குறைக்கும். வரப்புகளில் களைச் செடிகளை கட்டுப்படுத்தவும் உதவும்.
காற்றிலுள்ள வளிமண்டல தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்பட்டு மண்வளம் மேம்படுத்தப்படும். கூடுதல் வருமானம் கிடைக்கவும் வழிவகுக்கும். பயறு வகை பயிா்களை வரப்பு பயிா்களாக சாகுபடி செய்வதன் மூலம் ஒரு குடும்பத்தின் புரதத் தேவையை பூா்த்தி செய்யலாம்.
ஏக்கருக்கு 1.2 கிலோ பயறு விதைகள் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனை 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.60 வீதம் பெற்று கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
நாட்டு மாடு பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மானியம்!
விவசாயத்தில் அதிக லாபம் பெற வேளாண்துறையின் சூப்பரான அட்வைஸ்..!
Share your comments