1. விவசாய தகவல்கள்

இந்த சிறப்பு வகைப் பூண்டு சாகுபடி செய்து ரூ. 5 முதல் 10 லட்சம் ரூபாய் சம்பாத்தியம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Riyawan Type Garlic

ரியாவான்- இந்த வகை பூண்டை விளைவிப்பதால் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் சம்பாதிக்கலாம். விவசாய சந்தையில் ஒரு புதிய சிறந்த ரகமாகும். இந்த வகை பூண்டை பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் ஒப்பிடுகையில் சாகுபடி செலவு அதிகம் இல்லை.

பூண்டு ஒரு பணப் பயிர் என்றே கூறலாம். இந்தியாவில் ஆண்டு முழுவதும் அதிக தேவை உள்ளது. சமயலில் பயன்படுத்தும் மசாலாவில் இருந்து மருத்துவம் வரை சிறப்பான குணங்களை கொண்டுள்ளது, இது பெரும்பாலான இந்திய சமையலறைகளில் பொதுவாக இருக்கும் ஒரு ஒருங்கிணைந்த மூலப்பொருள். நீங்கள் வணிக விவசாயத்தைத் தொடங்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக ரியாவான் வகை பூண்டு சாகுபடி செய்ய முயற்சிக்கலாம்.

இந்த பூண்டு வகையின் சிறப்பு என்ன?

இந்த வகை பூண்டின் சிறந்த விஷயம் என்னவென்றால், இது 1 வருடத்திற்கு கெட்டுப்போகாது, அதே நேரத்தில் பூண்டுகளின் சாதாரண வகைகள் 5-7 மாதங்கள் மட்டுமே நீடிக்கும். இந்த வகை மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் வளர்க்கப்பட்டு மகசூல் செய்யப்படுகிறது.

1 ஏக்கர் நிலத்தில் இருந்து 50 குவிண்டால் வரை மகசூல் பெறலாம். ரியாவான் வகை பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள், சந்தையில் இந்த ரக பூண்டுகளை ஒரு குவிண்டால் மட்டுமே ரூ. 10- 25K வரை விற்க முடியும், அதே நேரத்தில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு செலவு ரூ. 40K வரை மட்டுமே. இத்தகைய சூழ்நிலையில், விவசாயிகள் 1 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்து ரூ .5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதில் ஒரு முழு பூண்டு 100 கிராம் வரை இருக்கும். ஒரு முடிச்சில் 6 முதல் 13 பள்ளுகள் உள்ளன.

இந்த வகை பூண்டின் தோல்மற்ற பூண்டு வகைகளை விட காகிதம் போல வெண்மையானது. ரியாவான் வகையின் வேர் வெளியே இருப்பதால் வெட்டுவதற்கு வசதியாக இருக்கும்.மிகவும் நேர்த்தியாக அதனை வெட்டிவிடலாம். எனவே இந்த ரகத்திற்கு சாகுபடி செலவும் மிக குறைவு.

ரியாவான் பூண்டு: சந்தை பகுப்பாய்வு

சந்தையில், சாதாரண பூண்டின் விலை குவிண்டாலுக்கு ரூ. 8000 வரை விற்கப்படுகிறது, அதே சமயம் பருவ காலத்தில், ரியாவான் பூண்டின் விலை குவிண்டாலுக்கு ரூ.10-25K க்கு விற்கப்படுகிறது. சென்னை, மதுரை மற்றும் தென்னிந்தியாவின் பல மாவட்டங்களை தவிர மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரியாவான் பூண்டு அனுப்பப்படுகிறது.

மீதமுள்ள பூண்டு வகைகளை விட ரியாவான் பூண்டில் எண்ணெய் மற்றும் கந்தகம் போன்ற மருத்துவ பொருட்கள் உள்ளன. இது பல்வேறு பூண்டு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. சிறப்பு என்னவென்றால் இந்த வகை பூண்டு 1 வருடத்திற்கு கெட்டுப்போகாது. மீதமுள்ள பூண்டு வகைகள் 5 முதல் 7 மாதங்கள் மட்டுமே கெட்டு போகாமல் இருக்கும் மற்றும் இந்த முழு பூண்டின் எடை 100 முதல் 125 கிராம் வரை இருக்கும்.

மேலும் படிக்க...

கருப்பு பூண்டின் ஆரோக்கியமான நன்மைகள்

English Summary: Cultivation of this special type of garlic costs Rs. Earn 5 to 10 lakh rupees! Published on: 18 September 2021, 10:59 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.