தமிழகம் முழுதும் நடப்பு பருவத்தில், 5 லட்சம் ஏக்கரில் காய்கறிகள் சாகுபடியை மேற்கொள்ள, தோட்டக்கலைத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதிக வருவாய் (Higher revenue)
தமிழகத்தைக் கொரோனா 2-வது அலை உலுக்கியபோதிலும், விவசாயத்தில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்த வில்லை. இந்தக் காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் காய்கறிகள், கீரை வகைகள், மூலிகைகளைச் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அதிகளவில் வருவாய் கிடைத்தது.
நேரடி விற்பனை (Direct sales)
நேரடியாகக் காய்கறி விற்பனையில் விவசாயிகளை தோட்டக்கலைத் துறை ஈடுபடுத்தியதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
சாகுபடிக்கு தயார் (Ready for cultivation)
தற்போது, மாநிலம் முழுவதும் பருவ மழை பெய்து வருகிறது. விவசாயிகளும், நடப்பு பருவத்தில், காய்கறிகள் சாகுபடியை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.
சாகுபடி இலக்கு (Production Target)
இதைப் பயன்படுத்திக் கொண்டு, சாகுபடி பரப்பை, 5 லட்சம் ஏக்கராக அதிகரிக்க, தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
உழவர் சந்தைகள் (Farmers' markets)
விரைவில், மாநிலம் முழுதும், உழவர் சந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. அவற்றில் விற்பனை செய்வதற்கு காய்கறிகள், பழங்கள் அதிகளவில் தேவைப்படும். எனவே இதனைக் கருதி, சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளிட்டவை, மானிய விலையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் அறிவுறுத்தல் (Instruction of the Minister)
எனவே, இதற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க, அனைத்து மாவட்ட தோட்டக்கலை துறையினருக்கும், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க...
ரூ.4,000 கொரோனா நிவாரணம் வழங்கும் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
இவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் கிடையாது, தமிழக அரசின் அதிர்ச்சித் தகவல்!
Share your comments