கீரப்பாளையம் மற்றும் மேல்புவனகிரி ஒன்றியங்களில் தேர்வு செய்தவர்களுக்கு விதை உளுந்து (Black Gram Seed) வழங்காமல் வேளாண் துறை அதிகாரிகள் அலைக்கழிக்க வைப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இலவச விதை உளுந்து (Free Seed BlackGram)
வேளாண்துறை சார்பில் கீரப்பாளையம் மற்றும் மேல்புவனகிரி ஒன்றியங்களில் ஒரு ஒன்றியத்திற்கு 4 வருவாய் கிராமங்களை தேர்வு செய்து டி.ஏ.பி., மானியமாக ரூ.5,000, நான்கு கிராமங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை உளுந்து இலவசமாக ஆண்டு தோறும் வழங்கப்படும்.
விவசாயிகள் கோரிக்கை
இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விதை உளுந்து வழங்கவில்லை. விவசாயிகளை அலுவலகம் அழைத்து, உளுந்து விதை இருப்பு இல்லை என கூறுவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க
மக்காச்சோள சாகுபடி: படைப்புழுத் தாக்குதலால் குறையும் சாகுபடி பரப்பு!
Share your comments