1. விவசாய தகவல்கள்

தென்னை விவசாயிகளின் திறன் மற்றும் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள்

Sarita Shekar
Sarita Shekar

coconut

விவசாயிகளின் திறனை வளர்த்தல் மற்றும் இடுபொருட்கள் வழங்குதல்

பரிந்துரைகளின்படி தென்னந் தோட்டங்களில் நடவு செய்வதற்காக கிழங்கு பயிர்களில் மேம்பட்ட இரகங்களின் தரமான நடவு பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.  தொழில்நுட்ப விவரக்குறிப்புகளின்படி பத்து செயல் விளக்கங்கள் நிறுவப்பட்டன.  விவசாயிகளுக்கு தென்னை மற்றும் கிழங்கு பயிர்கள் தொடர்பாக சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தென்னை மற்றும் ஊடு பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் செயல்திறனை கண்காணிக்க விஞ்ஞானிகளால் அடிக்கடி பண்ணை ஆலோசனை வருகைகள் மேற்கொள்ளப்பட்டன.

தொழில்நுட்ப செயல் விளக்கங்கள்

தள குறிப்பிட்ட ஊட்டச்சத்து மேலாண்மை (எஸ்.எஸ்.என்.எம்) அடிப்படையிலான தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள்: மரவள்ளி மற்றும் பெரு வெற்றிலை வள்ளியில் எஸ்.எஸ்.என்.எம் தொழில்நுட்பங்கள் மண்ணின் தரத்தை பராமரிப்பதைத் தவிர விவசாயிகளின் உர நடைமுறையோடு ஒப்பிடுகையில் மகசூலை சராசரியாக 24% அதிகரிக்கும்.  குறிப்பிட்ட விளைச்சல் இலக்குகளை அடைய கிழங்கு பயிர்களில் ஊட்டச்சத்து தேவைகளை நிர்வகிக்க மண் சோதனை மதிப்புகளின் அடிப்படையில் முதல் நிலை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களைக் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள்: ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ.யில் வெப்பமண்டல கிழங்கு பயிர்களில் இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களின், மூலம் 10-20% அதிக மகசூல், 20-40% இலாபம், கிழங்குகளின் தரம் மற்றும் மண்ணின் ஆரோக்கியம் மேம்படுவது கண்டறியப்பட்டது.  மரவள்ளி மற்றும் பெரு வெற்றிலை வள்ளிகிழங்கிற்காக உருவாக்கப்பட்ட இயற்கை வேளாண் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.

கிழங்கு பயிர்களின் ஊட்டச்சத்து தேவைகளை நிர்வகிக்க இயற்கை உரங்கள், பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள், உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு காரணிகள், உயிரியல் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை உள்ளடக்கிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.

செயல்விளக்க ஏற்பாடு மற்றும் செயல்படுத்தல்: ஐ.சி.ஏ.ஆர்-சி.டி.சி.ஆர்.ஐ விஞ்ஞானிகள் மற்றும் திட்டத்தின் குழு உறுப்பினர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மே-ஜூன் 2018 மாதங்களில் செயல்விளக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 எஸ்.எஸ்.என்.எம். தொழில்நுட்பங்களை செயல்விளக்கம் செய்ய விவசாயிகளின் தோட்டங்களில் மூன்று விதமான ஆராய்ச்சிகளான எஸ். எஸ். என். எம் தொழில்நுட்பம்

(1), தற்போதைய தொழில்நுட்ப (பிஓபி) பரிந்துரை

(2) மற்றும் உழவர் (எப். பி) நடைமுறை

(3) அதேபோல் இயற்கை வேளாண் தொழில் நுட்ப செயல் விளக்கங்களுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம்

(4), தற்போதைய தொழில்நுட்ப (பிஓபி) பரிந்துரை

(5) மற்றும் உழவர் நடைமுறை

(6) என பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 

மரவள்ளி மற்றும் பெரு வெற்றிலை வள்ளி கிழங்கில் இந்த முறைகள் பின்பற்றப்பட்டது. 

முக்கியமான இடுபொருட்கள் தொழில்நுட்ப திட்டத்தின் படி எடைபோடப்பட்டு பயன்படுத்தப்பட்டன.  பத்து தென்னை தோட்டங்களில் உள்ள மண்ணின் வேதியியல் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்து நிலை, மண்ணின் அமில கார நிலை, இயற்கை கார்பன், முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் மண்ணின் வளத்தை பராமரிக்க செயல்விளக்கங்களுக்கு முன்னும் பின்னும் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

தென்னை விவசாயிகளால் உணரப்பட்ட பயிர் முறைகளின் நன்மைகள்

 • பண்ணை மற்றும் இயற்கை வளங்களின் திறமையான பயன்பாடு (நிலம், நீர், சூரிய ஒளி, உழைப்பு, மூலதனம் போன்றவை)
 • ஒரு யூனிட் பகுதிக்கு குறைந்தபட்ச மூலப்பொருட்களுடன் கூடுதல் மகசூல்
 • குறைந்த சாகுபடி செலவு
 •  மண் வளத்தை மேம்படுத்த போதுமான நன்மை தரும் உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிர்கள்
 • குறைவான பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்கம்
 • பயிர் கழிவுகளை இயற்கை உரமாக திறம்பட மறுசுழற்சி செய்தல்
 • கடைபிடிக்க எளிதானது மற்றும் வெவ்வேறு வேளாண் காலநிலை நிலைமைகளுக்கு ஏற்றது
 • விவசாய குடும்பத்திற்கு அதிக ஆற்றல் கொண்ட உணவை வழங்கவும், பண்ணை விலங்குகளுக்கு உணவளிக்கவும் ஏற்றது
 • மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்துறை தயாரிப்புகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் ஆதாரம்
 • ஆபத்து மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக காப்பீட்டு பயிராக செயல்படுதல்
 •  உணவுப்பாதுகாப்பை உறுதி செய்தல், நிகர வருமானத்தை அதிகரித்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல்

மேலும் படிக்க

Aquaponics farming: காய்கறிகள் நீரின் மேற்பரப்பில் வளர்க்கப்படும், மீன் வளர்ப்பு கீழே செய்யப்படும்.

மாடித்தோட்டம் மற்றும் ஊட்டச்சத்துத் தோட்டம் பற்றியக் கருத்தரங்கம்!

விவசாய சோலார் மின் இணைப்புக்கு ரூ.3 லட்சம் மானியம்

English Summary: Demonstration of skill and technical performance of coconut farmers

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.