நெற்பயிர்களைத் தாக்கும் புகையான் நோய் பரவும் முறைகேடுகளையும், அதனைத் தடுக்கும் சிறந்த வழிமுறைகளையும் வேளாண் ஆலோசகர் விளக்கியுள்ளார். புகையான் நோய்த் தாக்குதலால் மகசூல் (Yield) குறைந்து விடும். இந்நோய்த் தாக்குதலை உடனடியாக கண்டறிந்து அதனைப் போக்குவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவசாயிகள் எடுக்க வேண்டும்.
நெல் சாகுபடி
கூடலுார் நெல் பயிரில் புகையான் நோய் (Tobacco disease) தாக்குதலைத் தடுக்க வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. மதுரை மாவட்டத்தில், கம்பம் பள்ளத்தாக்கில் பெரியாறு அணை (Periyar Dam) நீரை நம்பி 14,707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. முதல் போக சாகுபடிக்காக வழக்கமாக ஜூனில் தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்பட்டிருந்தால் மார்ச்சில் இரண்டாம் போக நெல் சாகுபடி (Paddy cultivation) முடிந்திருக்கும். ஆனால் அணையில் நீர் இருப்பு குறைவு காரணமாக முதல்போகத்திற்கு 2 மாதம் தாமதமாக 2020 ஆக. 13 ல் திறக்கப்பட்டது.கூடலுார், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது இரண்டாம் போகத்தில் கதிர்விடும் பருவத்தில் உள்ளது. இரவில் கூடுதல் பனி, பகலில் கடுமையான வெப்பத்தால் நெல் பயிரில் இலை நுனி கருகல், புகையான் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்நோய்களைத் தடுக்க வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
தடுப்பு முறை:
நெற்பயிரில் புகையான் நோயைத் தடுக்க லேம்டா சைக்ளோ திரின் (Lamda Cyclo Trin) ஒன்றரை மி.லி., சாப் 10 கிராம்' இவற்றை 12 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு தெளிப்பதால், புகையான் நோய் கட்டுப்பட்டு, மகசூல் அதிகரிக்கும்.
நெற்பயிரில் காலநிலைக்கேற்ப நோய்த்தாக்குதல் ஏற்பட்டு மகசூல் (Yield) குறையும். இதனைத் தடுக்க, வேளாண் துறை அவ்வப்போது விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி விவசாயிகள் மகசூலை அதிகரிக்கலாம்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!
மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிக்கு 40,000 பெண்கள் படையெடுப்பு!
Share your comments