சிறு குறு விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பயன்படுத்திக்கொள்ள வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் இயந்திரங்களை இலவசமாக பெறலாம்
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் நலன் கருதி விவசாய பொருட்கள் கொள்முதல், சந்தைப்படுத்துதல் மற்றும் விவசாயபயன்பாட்டுக்கான இயந்திரங்களின் புழக்கம் போன்றவற்றுக்கு ஊரடங்கு காலத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு மற்றும் டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் இணைந்து மாஸே பெர்குசன், ஐஷர் டிராக்டர்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு அனைத்து விதமான விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக 60 நாட்களுக்கு வாடகையின்றி இலவசமாக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு வழங்க உள்ளது.
விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வாடகை திட்டம் - டஃபே நிறுவனம் அறிமுகம்!!
யாரை அணுகவேண்டும்?
விவசாயிகள் இந்த சேவையை பெற உழவன் செயலியில் உள்ள வேளாண் இயந்திர வாடகை சேவை மூலமாகவோ அல்லது டாபே நிறுவனத்தின் ஜெ பார்ம் சேவை மையத்தில் 1800 4200 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது இச்சேவைக்கான மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் டேனியலை 95006 91658 என்ற செல்போன் எண்ணிலோ, தூத்துக்குடி மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளர் கே.மணிகண்டனை 94575 85752 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
மஞ்சள் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.12,000 மானியம்!
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!
Share your comments