1. விவசாய தகவல்கள்

அரசு உதவிக்கு பின்னும், கால்நடையில் வளர்ச்சி இல்லை. ஏன்?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Despite government assistance, there has been no growth in livestock. Why?

விவசாயிகளின் வருமானம் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது என்று மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். கால்நடை வளர்ப்பில் ஆடு வளர்ப்பு மலிவானது என கருதப்படுகிறது, அதை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக பைகா பழங்குடியினருக்கு கால்நடைகளை வழங்குவதன் மூலம் கால்நடை பராமரிப்புடன் இணைக்கப்பட வேண்டும். பைகா குடும்பத்திற்கு இரண்டு பசுக்கள் அல்லது எருமைகளை வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக, அம் மாநில முதலமைச்சர் தெரிவித்தார். இந்த பணியை எந்த ஒரு பகுதியில் இருந்தும் தொடங்கலாம். மேலும் அவர், வெற்றி பெற்றால் அதை முன்னெடுத்துச் செல்வோம் என குறிப்பிட்டார்.

தனியார் பால் நிறுவனங்கள் கடன் வாங்கி அதிக லாபம் ஈட்டும்போது, அரசு உதவி பெற்ற பிறகும் லாபம் குறைவாக இருப்பது ஏன் என்று துறை அதிகாரிகளிடம் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையை மத்திய பிரதேச முதலமைச்சர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரேம் சிங் படேலும் கலந்து கொண்டார். இன்னும் எவ்வளவு காலம் கால்நடை தோழில் மானியத்தில் இயங்கும் என்று முதல்வர் கூறினார். மானியம் இல்லாமல் கால்நடை தோழிலை நடத்த என்ன முயற்சி எடுக்கலாம் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மாட்டு சிறுநீர் மற்றும் சாணம் தொடர்பாக புதுமை தேவை (Innovation needed in regarding cow urine and dung)

மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டு சாணம் தொடர்பாக பல புதிய சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக சவுகான் குறிப்பிட்டார். பசுவின் சாணத்தில் இருந்து சிஎன்ஜி தயாரிப்பது போன்ற புதுமை நடக்கிறது. இந்த திசையில் வெறு என்ன வேலை செய்ய முடியும் என்பதையும் பார்ப்போம். எந்த புதிய சோதனைகள் நடந்தாலும், அதை பகுப்பாய்வு செய்து செயல்படுத்தவும். விலங்குகளின் இனத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனத்தை மேம்படுத்துவதன் மூலம் அவை பயனுள்ளதாகவும் இருத்தல் வேண்டும். செயற்கை கருவூட்டல் ஆடுகளின் இனத்தை மேம்படுத்துமா?

தேவைப்பட்டால், மாடு வளர்ப்பு திட்டத்தை மீண்டும் சரிபார்க்கவும் (If necessary, double-check the cow upgrade program)

கோழிப்பண்ணை தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கான முன்மொழிவையும் தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். மொத்தத்தில், கோழிப்பண்ணை வேலை நிறைய வேலைவாய்ப்பை அளிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஒப்பீட்டால் சற்று குறைவுதான். ஆகவே நாம் நன்கு செயல்பட்டு, மற்றவர்களுக்கு ஒரு மாதிரியாக மாற வேண்டும். பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களை வேலைவாய்ப்புடன் இணைக்க வேண்டும் என்றார் சவுகான். கால்நடைகள் சீரான முறையில் நடத்தப்பட வேண்டும்.

மாட்டு சாணம், மாட்டு மூத்திரத்தில் இருந்து பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, மாட்டு சாணம் மற்றும் மாட்டு மூத்திரத்தின் புதிய பயன்பாடுகளை முயற்சிக்கவும். ஆச்சார்யா வித்யா சாகர் கௌசம்வர்தன் யோஜனா திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்து வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதா? என்பதைப் பார்க்க அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். தேவைப்பட்டால், மாடு வளர்ப்பு திட்டத்தை மீண்டும் சரிபார்க்கவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:

சர்க்கரை வியாதி வராமல் தடுக்க எளிய வழி எது?

15 நிமிட வித்தியாசத்தில் வெவ்வேறு வருடங்களில் பிறந்த அதிசய இரட்டையர்கள்!

English Summary: Despite government assistance, there has been no growth in livestock. Why? Published on: 05 January 2022, 11:21 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.