உழவன் செயலியில் மாவட்ட ரீதியாக வழங்கப்படும் சில வேளாண் தகவல்களை அனைத்து மாவட்ட விவசாயிகளும் தெரிந்துக்கொள்ளும் வகையில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
Farm Gate Trading: விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் ( e-NAM ) செயல்பாட்டில் உள்ளது. e-NAM திட்டத்தில் ஏல நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பிற மாவட்டம், பிற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருந்தும் வணிகர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியும்.
e-NAM திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் (Farm Gate Trading ) நடைமுறைப்படுத்தப்படுகிறது. விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைக்கும் நோக்கில், தோட்டத்திற்க்கே விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று e-NAM திட்ட செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருகின்றனர். எனவே, விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி e-NAM, பண்ணைவாயில் வணிகம் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெறலாம். இத்தகவலை விருதுநகர் விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மறைமுக ஏலம்:
சேலம் விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் சேலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளம், ஆத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளம் மற்றும் மஞ்சள், ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்ப் பருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய விளைபொருட்களுக்கான மறைமுக ஏலம் நாளை 31.08.2023 வியாழன் அன்று நடைபெறுகிறது.
எனவே, சேலம், வாழப்பாடி, ஆத்தூர் மற்றும் ஓமலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் கலந்துகொண்டு தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என (முதுநிலை செயலாளர் / வேளாண்மை துணை இயக்குநர்) சேலம் விற்பனைக்குழு தெரிவித்துள்ளார்.
மக்காச்சோளம் விற்பனை:
திண்டுக்கல் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது மக்காச்சோளம் விளைபொருளை குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2100 /- க்கு விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். எனவே விவசாயிகள் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெறும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என செயலாளர், (திண்டுக்கல் விற்பனைக்குழு) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் துறை சார்பில் செயல்பட்டு வரும் உழவன் செயலியில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அரசின் மானியத்திட்டங்கள், தங்கள் பகுதி வேளாண் விளைப்பொருள் ஏல அறிவிப்புகள் மட்டுமின்றி விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தகவல்களும் இச்செயலியில் உள்ளன.
மேலும் காண்க:
தேசிய விதைகள் கழகத்தில் 89 காலிப்பணியிடம்- AGRI பயின்றவர்களுக்கும் வாய்ப்பு
Share your comments