சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டாரம், வேளாண்மை - உழவர் நலத்துறை வேளாண் விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரங்களான ஆர்.என்.ஆர், ஜே.சி.எல், வைகை-1, டி.கே.எம்-13 போன்ற நெல் இரகங்கள் மானிய விலையில் இருப்பு உள்ளது.
மேலும் மண்ணில் மட்குண்டு கிடக்கும் தழைச்சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்துக்களை களித்து பயிருக்கு ஏற்ற வகையில் அல்லது பயிருக்கு சத்துக்களை எடுத்து தரும் உயிர் உரகங்கள் 50% மானியத்தில் உள்ளது.
மேலும் மண்ணின் மூலம் பரவும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட உயிரியல் கட்டுப்பாடு காரணிகளான சூடோ மோனஸ் டிரைக்கோடர்மா விரிடி மானிய விலையில் தற்போழுது இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, நெற்பயிரில் ஏற்படும் செந்தாழை உரப்பற்றாக்குறையை நீக்க நுண்ணூட்டங்கள் 50% மானியத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் அனைவரும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
தமிழக அரசு பயிர் காப்பீட்டு பிரீமியம் மானியத்திற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஓதுக்கீடு
Share your comments