Krishi Jagran Tamil
Menu Close Menu

இயற்கை முறையில் மண் வளத்தை பெறுவும் மற்றும் பாதுகாக்கவும் என்ன செய்ய வேண்டும்?

Tuesday, 17 September 2019 12:55 PM
Healthy Soil

நிலத்தை வளபடுத்துவது எப்படி?

வேளாண்மைக்கு அடிப்படை ஆதாரம்  மண், எனினும் மண்ணின் உரத்தன்மை பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அரை நூற்றாண்டாக மண்ணின் மீது அதிக  ரசாயனத்தை பயன்படுத்தி மண்ணின் உயிர் தன்மையைச் சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.  அரசு நிர்ணியத்த அளவை விட அதிக அளவு யூரியாவை உபயோகப்படுத்தும் போது மண்ணும் வளமிழந்து விடுகிறது.

விவசாய நிலத்தின் வளத்தை முதலில் பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். மண்ணில் உள்ள உப்பு மற்றும் மின்னாற்றலைக் கடத்தும் திறனை வைத்து மண்ணின் வளத்தைத் தீர்மானிப்பார்கள். அதாவது ஒரு டெசிசைமன்/ மீட்டருக்குக் குறைவான மின் ஆற்றலைக் கடத்தினால் அது வளமான மண் எனவும்,  1 - 3  டெசிசைமன் / மீட்டர் கடத்தினால் அது வளம் குறைத்தாக ரகம் எனவும்,  3 - க்கு அதிகமாக  டெசிசைமன்/ மீட்டருக்கு அதிகமாகக் கடத்தினால் அது வளமில்லாத மண் என்றும், பயிரிடுவதற்கு உகந்தது அல்ல என்று பொருள்.

Agri Waste Compost

விவசாகிகளின் பரிந்துரை

மண்ணின் வளத்தை பெறுவதற்கு பல தானிய விதைப்பு உதவும் என்கிறார்கள் விவசாகிகள்.   ஒரு ஏக்கருக்கு

 • மஞ்சள் சோளம் - 5 கிலோ
 • கம்பு - 1 கிலோ 
 • சிகப்பு சோளம் - 1 கிலோ
 • நரி பயிறு - 200 கிராம்
 • கொள்ளு - 200 கிராம்
 • மொச்சை - 200 கிராம்
 • எள் - 200 கிராம்
 • உளுந்து - 200 கிராம்
 • தட்டைபயிறு - 200 கிராம்
 • பாசி பயிறு - 200 கிராம்
 • கடுகு - 100 கிராம்
 • வெந்தயம் - 100 கிராம்
 • சீரகம் - 100 கிராம்
 • ஆமணக்கு விதை - 100 கிராம்
 • தக்கை பூண்டு - 1 kg
 • சணப்பை - 1 kg

மேலே குறிப்பிட்ட அனைத்தையும்  கலந்து போட வேண்டும். கொடுக்கப்பட்ட பொருட்களில் தங்களிடம் உள்ளதை அதிகபடுத்தி கொள்ளலாம். இதில் சோளம் மிகவும் முக்கியமானது என்பதால் கூடுதலாக எடுத்து கொள்ளலாம். இவற்றிலிருந்து ஒரு ஏக்கருக்கு தேவையான 7 – 9 டன் மக்கு கிடைத்து  விடும்.

Goat Farming

எரு உரம் போடுதல்

கால்நடை வளர்ப்பு இல்லாமல் வேளாண்மை நிறைவுறாது எனலாம். ஆடு, மாடு, கோழி எருக்களை ஒன்றாக ஒரே எருவு குழியில் கொட்டி மக்க செய்து பயன்படுத்தலாம். அத்துடன் வேப்ப தழை, எருக்கு, நொச்சி போன்றவையும் சேர்த்து மக்கச் செய்து உபயோகிக்கலாம். கால்நடை கழிவு எனில் ஒரு ஏக்கருக்கு 2 டிராக்டர் லோடு வரை தேவைப்படும். தற்போது கிடை போடுதலாலும் மண்ணின் வளம் மேம்படுகிறது.

கழிவுகளே போதும்

பொதுவாக விவசாய நிலத்தில் அறுவடை முடிந்த பிறகு, அதன் மீதி பாகங்களை வயல்களில் பரவாலாக போட்டு உழ வேண்டும். எடுத்துக்காட்டாக வெங்காயம், கரும்பு தோகைகளை வயலில் பரப்பி விடுதல் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் ஒரு உபாயம் உண்டு.. ஆம் நாட்டு மாடு எருவாக இருந்தாலும்  1 லிட்டர் பஞ்ச கவ்யா,  5 லிட்டர் ஜீவாமிர்தம் மற்றும்  1 லிட்டர் மீன் அமிலம் கலந்து பயன்படுத்தலாம்.

மண் பராமரிப்பு

எந்த பயிராக இருந்தாலும் விதை நேர்த்தி மிக அவசியம். நேர்த்தியான விதைகளால் மட்டுமே அதிக மகசூல் தர இயலும். அதே போன்று ஒவ்வொரு முறை நீர் பாய்ச்சும் போதும் ஏதாவது ஒரு இடுபொருள் ஜீவாமிர்தம், பஞ்ச காவ்யா, மீன் அமிலம் என ஏதேனும் ஒன்றை பயன் படுத்த வேண்டும். இதன் மூலம் மண்ணின் வளம் பாதுகாக்கப் படும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

Healthy Soil Plant-friendly soil Organic Solution Soil Fertility soil organisms Soil life Healthy Farming Soil

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

CopyRight - 2019 Krishi Jagran Media Group. All Rights Reserved.