1. விவசாய தகவல்கள்

உள்நாட்டு வணிக யோசனைகள்: முதல் 5 யோசனைகளைத் தொடங்கி அதிக லாபம் ஈட்டலாம்!

Aruljothe Alagar
Aruljothe Alagar
Domestic Business Ideas: Start 5 Domestic Business Ideas and Make More Profits!

கிராம வணிக யோசனைகள்

தற்போது, ​​சொந்த தொழில் தொடங்குவது அனைவரின் விருப்பமாக உள்ளது.  ஆனால் பணப் பற்றாக்குறையால், மக்கள் தங்கள் ஒரு அடி பின்னே இருக்கிறார்கள். இன்று இந்த கட்டுரையில்  5 சிறு வணிகங்களைப் பற்றிய தகவல்களை குறித்து காணலாம். இது உங்களுக்குத் மிக குறைந்த முதலீட்டில் அதிக நன்மை அளிக்கும். இதற்காக நீங்கள் படித்த பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நம் நாட்டில்  பல நல்ல பொருட்கள் மலிவான விலையில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது, ஆனாலும் மக்கள் பிராண்டட் பொருட்களையே வாங்க விரும்புகிறார்கள். இத்தகைய நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்கவும்  சில உள்நாட்டு வணிக யோசனைகள் கொண்டு வந்துள்ளோம். எனவே அவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

பால் தயாரிப்பு வணிகம்

தற்போது, ​​பால் பொருட்களின் வியாபாரம் மிகவும் இலாபகரமான தொழிலாக மாறி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பால், நெய், வெண்ணெய்,  தயிர் போன்ற தொழிலைத் தொடங்க நினைத்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் எளிதாக இந்த தொழிலை சிறிய அளவில் தொடங்கலாம்.

நாட்டு பற்பசை தயாரித்தல் வணிகம்

நீங்கள் உள்நாட்டுப் பொருட்களின் தொழிலைச் செய்ய நினைத்தால், நீங்கள் உள்நாட்டு பற்பசை  செய்யும் தொழிலைத் தொடங்கலாம். சொந்த மூலிகைகளை பயன்படுத்தி நல்ல மற்றும் மலிவு விலையில் பற்பசையை தயாரித்து சந்தையில் விற்கலாம்.

விதை, உரம் மற்றும் மண்புழு உரம்

விவசாயம் சம்பந்தமான ஏதேனும் தொழிலைத் தொடங்க நினைத்தால், விவசாயிகளுக்கு விதை, உரம் மற்றும் மண்புழு உரக்கடையைத் திறக்கலாம்.

இதில் நீங்கள் நல்ல தரமான விதைகள், பல்வேறு வகையான உரங்கள் வைத்திருக்க முடியும். இதன் மூலம், விவசாயிகள் தொலைதூர நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது, மேலும் உங்கள் வியாபாரமும் அதிகரிக்கும்.

கால்நடை வளர்ப்பு

நீங்கள் கால்நடை வளர்ப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், பால் வியாபாரம் உங்களுக்கு ஒரு நல்ல வணிகத் தொடக்கம் ஆகும்.

இதற்காக நீங்கள் நல்ல மாடு மற்றும் எருமை இனங்களை வைத்திருக்க வேண்டும். முதலில் உங்கள் கால்நடைத் தொழிலை ஒரு சில கால்நடைகளை வைத்துக் கூட ஆரம்பிக்கலாம், லாபம் வரத் தொடங்கியவுடன், நீங்கள் கொஞ்சம் முதலீடு செய்து பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரித்து நல்ல லாபம் பெறலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த பிராண்ட் பாலை உருவாக்கலாம்.

கோழி வளர்ப்பு வணிகம்

தற்போது, ​​முட்டை மற்றும் கோழிக்கான தேவை அதிகரித்து வருகிறது, எனவே நீங்கள் ஒரு கோழி வியாபாரத்தையும் தொடங்கலாம். ஏனென்றால் இது ஒரு பசுமையான வணிகம், அதன் தேவை ஒருபோதும் குறையாது. இந்த தொழிலைத் தொடங்க உங்களுக்கு கொஞ்சம் பெரிய இடம் தேவைப்படும். இதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த கோழிப் பண்ணையைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க...

இலாபகரமான பழம் மற்றும் காய்கறி வணிகம்!

English Summary: Domestic Business Ideas: Start 5 Domestic Business Ideas and Make More Profits! Published on: 05 October 2021, 12:16 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.