ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிலையத்துக்கு, வேளாண் ஆராய்ச்சியில் டிரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆம்பெர் துபே கூறுகையில்:
-
ஆளில்லா விமானங்களான டிரோன்களைப் (Drones) பயன்படுத்தி வேளாண்மை ஆராய்ச்சியில் ஈடுபட, இக்ரிசாட் அமைப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
இந்த அனுமதி, இக்ரிசாட் அமைப்பின் டிஜிட்டல் ஸ்கை பிளாட்பார்ம் திட்டம் (அலகு- 1) நிறைவேறும் வரை அல்லது ஆறு மாத காலத்துக்கு வழங்கப்படுகிறது.
-
வேளாண்மை குறித்த தரவுகளைச் சேகரிக்க ஆளில்லா விமானங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-
துல்லிய வேளாண்மை, வெட்டுக்கிளிகள் கட்டுப்பாடு, சாகுபடி அபிவிருத்தி ஆகிய வேளாண் துறைகளில் ஆளில்லா விமானங்களின் பயன்பாடு பெரும் பங்களிப்பை அளிக்கிறது.
-
இதன்மூலம் இளம் தொழில்முனைவோரும் ஆய்வாளர்களும் ஆளில்லா விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி நாட்டிலுள்ள 6.6 லட்சம் கிராமங்களில் வேளாண்மை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை அரசு ஊக்குவிக்கிறது என்றார்.
மேலும் படிக்க...
நிறைந்த லாபம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு - மானியம் பெறஉடனே விண்ணப்பியுங்கள்!
Share your comments