ஓராண்டு தாவரமாக வேகமாக படர்ந்து செல்லும் சுரைக்காய் ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் பெறலாம். தரையில், கூரையில், மாட்டுக்கொட்டகையில் கொடியை படரவிடலாம். பந்தல் இன்றியும் வறட்சியை தாங்கி வளரும்.
சுரைக்காய் சாகுபடி (Zucchini Cultivation)
சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி, புரதம் உள்ளன. சுரைக்காய் ரகங்களில் கோ 1, அர்காபஹர், பூசா சம்மா, புராப்லிபிக் நீளம், புராலிக் உருண்டை மெகதுாத் மற்றும் பூசா மஞ்சரி ரகங்கள் குறிப்பிடத்தக்கவை. நாற்றாய் வளர்ப்பது நல்ல லாபம் தரும். ஒரு ஏக்கருக்கு தேவையான 1.200 கிலோவை பாலிதீன் பை அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடலாம். அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கிலோ விதைக்கு 500 கிராம் அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம்.
நடவு வயலுக்கு 10 டன் மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் 5 டன், 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இட வேண்டும். ஏக்கருக்கு 800 கிராம் அசோஸ்பைரில்லம் (4 பாக்கெட்), சூடோமோனஸ் 5 பாக்கெட் அளவில் மட்கிய தொழு உரத்துடன் 40 கிலோ வேப்பம் புண்ணாக்கு சேர்த்து கடைசி உழவிற்கு முன் இடவேண்டும். செடிக்கு செடி 2.5 மீட்டர் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர் வீதம் இடைவெளியில் குழியெடுக்க வேண்டும். குழியை 7 முதல் 10 நாட்கள் ஆறவிட வேண்டும். ஓரடி நீளம், அகலம், ஆழத்தில் குழி தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நட வேண்டும்.
பெண் பூக்கள் தோன்றிட 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி 'எக்ரல்' பயிர் வளர்ச்சி ஊக்கி கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல் முறையும் வாரம் ஒரு முறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். உயர் விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். 30 நாட்கள் கழித்து தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் மேலுரமாக இட வேண்டும். வண்டுகள் வந்தால் ஒரு லிட்டர் நீரில் 'மீதைல் டெமடான்' ஒரு மில்லி கலந்து தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத்தூள் தெளிக்கக்கூடாது. மோனோக்ரோட்டாபாஸ் பயன்படுத்தக்கூடாது.
இளங்கோவன்,
வேளாண் இணை இயக்குனர்
காஞ்சிபுரம்
98420 07125
மேலும் படிக்க
பலாப்பழ ஐஸ்கிரீம் உள்பட 10 விதமான பால் பொருட்கள்: அறிமுகம் செய்தது ஆவின்!
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடி: ஆர்வம் காட்டும் விவசாயிகள்!
Share your comments