1. விவசாய தகவல்கள்

கிசான் கிரெடிட் கார்டின் அவசியம்: எப்படி வாங்குவது?

R. Balakrishnan
R. Balakrishnan

Kisan Credit Card

விவசாயிகளுக்கு பல்வேறு தருணங்களில் பண உதவி தேவைப்படலாம். இதற்காக அவர்கள் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்குவது வழக்கம். இதை தடுப்பதற்காக மத்திய அரசு கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்கி அவதிப்பட வேண்டியதில்லை. மேலும், வங்கிக் கடன் வாங்க முயற்சித்தாலும், கடன் பெறுவதற்காக அலையத் தேவையில்லை.

கிசான் கிரெடிட் கார்டு (Kisan Credit Card)

வங்கியில் கடன் பெறுவதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை அலைய வேண்டும். எனவே விவசாயிகள் உடனடி பணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிசான் கிரெடிட் கார்டுகள் சிறந்த சாய்ஸ்.

யாரெல்லாம் கிசான் கிரெடிட் கார்டு வாங்கலாம்? ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்படி, விவசாயிகள், குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்கள், விவசாய சுய உதவிக் குழுக்கள் ஆகியவர்கள் கிசான் கிரெடிட் கார்டு வாங்கலாம். கிசான் கிரெடிட் கார்டு மூலமாக 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கும் விவசாயிகளுக்கு 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இதுபோக பிரதமர் ஃபசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் தகுதியான பயிர்களுக்கு பயிர் காப்பீடு வசதியும் உண்டு.

வட்டி மானியம் (Interest Subsidy)

கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விதைகள், உரம், விவசாய உபகரணங்களை வாங்குவதற்கு கடன் பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்ச கடன் வரம்பு 3 லட்சம் ரூபாய். நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ள விவசாயிகளுக்கு வரம்பு உயர்வு. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் வட்டி மானியமும் கிடைக்கும். விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள வங்கிக் கிளைக்கு சென்று கிசான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். விவசாயிகளின் கிரெடிட் ஸ்கோர், நிலம், பயிர், வருமானம் போன்றவற்றை சரிபார்த்த பின் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

மேலும் படிக்க

கூட்டுறவு வங்கிகளுக்கு அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி அதிரடி!

EMI கட்டுவோர்க்கு அதிர்ச்சி: வட்டியை அதிகரித்த கனரா வங்கி!

English Summary: Essentials of Kisan Credit Card: How to Buy?

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.