1. விவசாய தகவல்கள்

மீன்வளத்துறை சார்ந்த பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Exempt from curfew for fisheries related tasks!
Credit : Samayam Tamil

கொரோனாப் பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடிப்பு, விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :-

ஊரடங்கு உத்தரவு (Curfew)

கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்றைத் தடுப்பதற்காக மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில்‌ 25.3.2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மை சட்டத்தின்‌ கீழ்‌ ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன்‌ அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதியக் கட்டுப்பாடுகள் (New restrictions)

தமிழ்நாட்டில்‌ இந்த நோய்தொற்று தற்போது அதிகரித்து வரும்‌ சூழ்நிலை உள்ளது. இதன்‌ காரணமாக நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த மே 24ம் தேதி வரைப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும்‌ விதிக்கப்பட்டுள்ளன.

கோரிக்கை ஏற்பு (Acceptance of request)

எனினும், மீன்‌ பிடிப்பு, மீன்‌ வளர்ப்பு மற்றும்‌ மீன்‌ விற்பனை சார்ந்த பணிகளுக்கு உரியத் தளர்வுகளை வழங்குமாறு, மீனவர்‌ சங்கங்கள்‌ மீன்‌ மற்றும்‌ இறால்‌ சார்ந்தப் பல்வேறு தொழில்‌ நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்தன. இதனைக் கனிவுடன் பரிசீலித்த அரசுக் கீழ்க்கண்ட மீன்‌ வளர்ப்பு மற்றும்‌ மீன்‌ சார்ந்த தொழில்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களித்து அனுமதி அளித்துள்ளது.

மீன்பிடிக்கத் தடை (Prohibition of fishing)

தற்போது மீன்பிடி தடை காலம்‌ என்பதால்‌ விசைப் படகுகளுக்கு மீன்பிடி தடை உள்ள நிலையில்‌ நாட்டுப் படகுகள்‌ தொடர்ந்து மீன்பிடிப்பு மற்றும்‌ மீன்‌ விற்பனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்புக் குழு (Monitoring Committee)

மீன்‌ சந்தையில்‌ மீன்‌ விற்பனையை கண்காணித்திடவும்‌ முறைப்படுத்திடவும்‌ மீன்வளத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்‌ துறை மற்றும்‌ சுகாதாரத்‌ துறை அலுவலர்கள்‌ கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து வசதி (Transportation facility)

மீன்‌ பதப்படுத்தும்‌ தொழிற்சாலைகள்‌ உரிய வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளுடன்‌ அரசால்‌ அனுமதிக்கப்பட்டுள்ள பணியாளர்கள்‌ எண்ணிக்கையைக் கொண்டுத் தொடர்ந்து செயல்படலாம். மீன் பதப்படுத்தும்‌ தொழிற்சாலை பணியாளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்தி பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

உயிருடன் பாதுகாக்க (To keep alive)

மீன்‌ வளர்ப்பு மற்றும்‌ இறால்‌ வளர்ப்பு போன்ற பணிகளுக்கு தேவையான உள்ளீட்டு பொருட்கள்‌ கொள்முதல்‌ மற்றும்‌ விற்பனை, போக்குவரத்து வசதி மற்றும்‌ உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்‌ சந்தைக்கு எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
வண்ண மீன்‌ வளர்ப்போர்‌ மற்றும் விற்பனை செய்வோர்‌, தங்கள்‌ கைவசம்‌ இருப்பில்‌ உள்ள மீன்களை உயிருடன்‌ பாதுகாக்க தேவையான அத்தியாவசிய பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில்  கொள்முதல் (Purchase online)

கொரோனா பெருந்தொற்று காலத்தில்‌ பொதுமக்களுக்கு புரதச்சத்து மிக்க மீன்‌ உணவினை விற்பனைக்கு வாகனங்களில்‌ எவ்வித தடையுமின்றி கொண்டு செல்லலாம்‌. தமிழ்நாடு மீன்‌ வளர்ச்சி கழகத்தின்‌ மூலம்‌ சென்னை மாநகரில்‌ மீன்‌ விற்பனை 6 நிரந்தர மற்றும்‌ 7 நடமாடும்‌ மீன்‌ விற்பனை அங்காடிகள்‌ மூலம்‌ நடைபெறவும்‌ மீன்‌ நுகர்வோர்‌, தங்களுக்குத்‌ தேவையான மீன்களை ஆன்லைன்‌ மூலமாக கொள்முதல்‌ செய்து கொள்ள பிரத்யேகமாக www.meengal.com என்ற இணையதளமும்‌ meengal கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்

இதன் ‌ வாயிலாக விற்பனை மேற்கொள்ளப்பட்டு அங்காடிகளிவிருந்து 5 கிலோ மீட்டர்‌ சுற்றளவு உள்ள வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும்‌ வகையில்‌ மீன்‌ விற்பனை மேற்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள்‌ தங்கள்‌ மீன்‌ தேவை மற்றும்‌ அதன்‌ தொடர்புடைய புகார்‌ தெரிவிக்க, (044-24956896, 044-29530392, 9384824206 மற்றும்‌ 9840045037) சிறப்பு தொலைபேசி எண்கள்‌ வழங்கப்பட்டுள்ளன.

மீன் விற்பனை (Sale of fish)

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்‌ கொரோனா நோய்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்‌ அமைந்துள்ள 17,500 சதுர அடி பரப்பிலான மீன்‌ விற்பனை நிலையத்தில்‌ மீன்கள்‌ வாங்க வரும்‌ பொதுமக்கள்‌ மற்றும்‌ வியாபாரிகளை மீன்‌ துறை அலுவலர்கள்‌, காவல்‌ துறை அலுவலர்களுடன்‌ இணைந்து அரசு விதித்த நிபந்தனையின்படி சமூக இடைவெளியுடன்‌ மீன்‌ விற்பனை செய்யத் தக்க ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அரபிக்கடலில் சூறாவளிக் காற்று- 5 நாட்களுக்கு மீன்பிடிக்கத் தடை!

டென்ஷனில்லாமல் பென்சன் வாங்கனுமா? ரூ.74,300 பென்ஷன் தரும் அசத்தல் திட்டம்!

தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராவது?

English Summary: Exempt from curfew for fisheries related tasks! Published on: 13 May 2021, 08:33 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.