சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வழங்கும் இந்த வாய்ப்பை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
11 லட்சம்
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்தசெப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பயிர் காப்பீடு செய்யப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அவகாசம் முடிந்தது
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழைபெய்துவரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு,திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவ.15-ம் தேதியுடன் முடிவடைந்தது.
நீட்டிக்கக் கோரிக்கை
நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவகாசம் நீட்டிப்பு
இந்த நிலையில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்காக நவம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பயிர் காப்பீடு செய்ய நாளை, நாளை மறுநாள் வங்கிகள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உட்பட 27 மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யது கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments