சின்னவெங்காயத்தின் அறுவடை அமோகமாக இருப்பதால், விலை மேலும் குறைய வாய்ப்பு உருவாகியுள்ளது.
சமையலுக்குத் தேவைப்படும் முக்கியமான பொருட்களில் வெங்காயம் இன்றியமையாதது. அதிலும், சின்ன வெங்காயம், சமையலுக்குக் கூடுதல் சுவையைக் கொடுப்பதுடன், ஆரோக்கியத்திற்கும் அடித்தளம் அமைக்கும் என்பதால், தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரத்து குறைவின் காரணமாகக் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
ரூ.140க்கு விற்பனை (Selling for Rs.140)
கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் ஒன்றியம் சின்ன வெங்காயம் சாகுபடியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவம் தவறி பெய்த மழையால், சின்ன வெங்காயம் சேதமடைந்து, விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, கிலோ ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனையானது.
அறுவடை (Harvest)
இந்நிலையில், தீத்திபாளையம், மாதம்பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது. பனி மற்றும் வெயில் காரணமாக, விளைச்சல் சரிந்துள்ளது. ஏக்கருக்கு ஆறு டன் கிடைக்க வேண்டிய சூழலில், நான்கு டன் மட்டுமே கிடைத்து உள்ளது. இருப்பினும், 10 நாட்களில் அனைத்து பகுதிகளிலும் அறுவடை துவங்கும் என்பதால், விலை குறைய வாய்ப்புள்ளது.
குறிப்பாக பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகமாக உள்ளது. இதனால், விலையும் குறைந்துள்ளது.
வீழ்ந்தது விலை (Falling onion prices)
அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது 90 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதனிடையே , கறிவேப்பிலை விலையும் கடுமையாக உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ கறிவேப்பிலை தென்னம்பாளையம் சந்தையில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது பனியின் காரணமாகக் கறிவேப்பிலை வரத்துக் குறைவாக இருந்ததால், இந்த விலை உயர்வு என தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம்- பிரதமர் மோடி டுவிட்!
Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்
Share your comments