1. செய்திகள்

Free Cooking Gas: ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச சமையல் சிலிண்டர்- உடனே விண்ணப்பியுங்கள் !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Free cooking cylinder for one crore poor - apply now!

Credit: English News

அடுத்த இரண்டு ஆண்டுகளில், இன்னும் ஒரு கோடி ஏழை மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனவே இலவச சமையல் சிலிண்டர் (Free LPG Connections) பெற விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிக்க ஓர் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போதைய காலங்களில், நகரத்திலும் கிராமத்திலும் சமைக்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிப்பு (Continuing increase)

இது ஒருபுறம் என்றால், சமையல் சிலிண்டரின் விலையும் கடந்த சில மாதங்களாகக் கடுமையாக அதிகரித்து, நடுத்தர குடும்பத்தினருக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தி வருகிறது மறுபுறம்.

அதே நேரத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இலவச எல்பிஜி எரிவாயு (LPG Gas Connections) இணைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக 
மத்திய  பெட்ரோலியத்துறைச் செயலாளர் தருண் கபூர் (Tarun Kapoor) அறிவித்துள்ளார்.

எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

BPL(Below Poverty Line)

உஜ்வாலா திட்டத்தின் கீழ், (வறுமைக் கோட்டிற்கு கீழ் (BPL )உள்ள குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு பெண்ணும் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். இதற்காக, KYC படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள எல்பிஜி மையத்தில் சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்கும் போது, ​​நீங்கள் 14.2 கிலோ அல்லது ஐந்து கிலோ ஒரு சிலிண்டர் (LPG Cylinder) வேண்டுமா என்பதைத் தவறாமல் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதேநேரத்தில் உஜ்வாலா திட்டத்தின் படிவத்தை நீங்கள் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த BPL கார்டு, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி அறிக்கை போன்ற ஆவணங்கள் அவசியம்.

மேலும் படிக்க....

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க உறுதி பூண்டுள்ளோம்- பிரதமர் மோடி டுவிட்!

உரிமையாளரின் உயிரைக்குடித்த சேவல் சண்டை!

மானியத்தில் கிணறு ரெடி- மின்சாரம் எப்போ கிடைக்கும்?

English Summary: Free cooking cylinder for one crore poor - apply now!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.