வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருட்களை இருப்பு வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ரமேஷ் கூறினார்.
ஏலம் மூலம் விற்பனை
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், முந்திரி, கடலை, எள், மிளகாய், உளுந்து உள்ளிட்ட விளை பொருட்கள் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் (Purchase) செய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விளை பொருட்களை 6 மாதங்கள் வரை இருப்பு வைத்து 5 சதவீத வட்டியில் பொருளீட்டு கடன் (Loan) மூலம் பணம் பெற்றுக்கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரை (Copra) கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வேதாரண்யம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு இதுவரை 62 டன் நெல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு ரூ.5.15 லட்சத்தையும், 212 டன் நிலக்கடலையை (Groundnut) இருப்பு வைத்து ரூ.53 லட்சத்தையும் பெற்று உள்ளதாக விற்பனை அலுவலர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
மேலும் படிக்க
குறுவை சாகுபடிக்கு பயிர்க்கடன்: கடலூரில் ரூ.34.57 கோடி வழங்கல்
Share your comments