கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட வேளாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
-
விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாப்பதற்காக, பிரதமரின் புதுப்பிக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டம் (Crop Insurance Scheme) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
2020ம் ஆண்டில் சிறப்புப் பருவமாக தமிழ்நாட்டில் நெல் பயிர் மற்றும் இதர சிறப்புப் பருவ பயிர்களான மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை காப்பீடு செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
இத்திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் (Agriculture Insurance Company) செயல்படுத்துகிறது.
-
நடப்பாண்டில் சம்பா பருவ நெல் பயிருக்கு 758 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
-
கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளில் பதிவு செய்யலாம்.
-
கடன் பெறாத விவசாயிகள் மற்ற சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம்
-
நெல் பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 30ம் தேதியும், பருத்திக்கு நவம்பர் 15ம் தேதியும் கடைசி நாளாகும்.
-
நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.469ம், பருத்திக்கு ரூ.1,074 வீதமும் பிரீமியமாகச் செலுத்த வேண்டும்.
-
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவுக் கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா, அடங்கல் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின்னர் அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
-
இத்திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், அருகேயுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
-
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய அழைப்பு- விவசாயிகள் கவனத்திற்கு!
விலை மதிப்பற்றது வெங்காயம் - ஏன் தெரியுமா?
Share your comments