திருப்பரங்குன்றம் பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வரும்.
நெல் நடவு பணி (Paddy Planting)
இந்த ஆண்டு அணை தண்ணீர் திறக்க போதும் மழைநீரால் அனைத்து கண்மாய்களும் நிரம்பின. தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் விவசாயிகள் 100 சதவீதம் நெல் நடவு பணியை துவக்கினர். ஆரம்பத்தில் நடப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் நெற்கதிர்கள் பழுத்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் நிலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் கோடை நடவும் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.
நடப்பாண்டில் நல்ல மழை பெய்துள்ளதால், நெற்பயிர்கள் நல்ல வளர்ச்சியுடன் காணப்படுகிறது. இதனால் அறுவடையின் போது நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்க்கின்றனர். மகசூல் கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், விவசாயிகளுக்கு நியாயமான விற்பனை விலை கிடைத்தால் தான், அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
மேலும் படிக்க
320 பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி: விவசாயி அசத்தல்!
மக்காச்சோள சாகுபடி: படைப்புழுத் தாக்குதலால் குறையும் சாகுபடி பரப்பு!
Share your comments