ராமநாதபுரம் மாவட்டத்தில் மார்ச் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.03.2023 அன்று காலை 10.00 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட பொருள்களை விவாதிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2.கொடி வகை பயிர்களை ஊக்குவிக்க நிரந்தர பந்தல் அமைக்க 50% மானியம்
கொடி வகை தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க விளைப்பொருட்களின் தரத்தை உயர்த்த பந்தல் அமைத்து சாகுபடி செய்வது அவசியமாகிறது. ஒரு ஏக்டர் நிரந்தர பந்தல் அமைத்து சாகுபடி செய்ய சுமாராக ரூ. 4 முதல் 5 லட்சம் வரை செலவாகும். விவசாயிகளின் செலவினை குறைத்து நிரந்தர பந்தல் அமைக்க சாகுபடி செய்து தோட்டக்கலை துறை மூலம் 50 சதவீத பின்னேற்பு மானியம், ஏக்டருக்கு அதிகபட்சமாக ரூபாய் 2,00,000 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற கீழ் காணும் இணையதளத்தில் பதிவு செய்யவும்.
www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php
3.49வது பால் பண்ணை தொழில் மாநாடு மற்றும் கண்காட்சி 2023 முழு வீச்சில் தொடக்கம்
49வது பால் பண்ணை தொழில் மாநாடு மற்றும் கண்காட்சி 2023 இன்று முழு வீச்சில் தொடங்கியது. இந்த கண்காட்சி குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஹெலிபேட் கண்காட்சி மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.இந்த கண்காட்சி இந்திய நுகர்வோரின் சுவை விவரம் மற்றும் விருப்பத்தேர்வுகள் நாட்டின் வீடுகளின் பன்முகத்தன்மையின் பிரதிபலிப்பாகும்.
மேலும் படிக்க:
உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக 40% மானியம்!
4.லால்குடியில் விவசாயப் புரட்சி தரிசு நிலத்தை எலுமிச்சைப் பண்ணையாக மாற்றி சாதனை
திருச்சி மாவட்டம் லால்குடியில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மாநில வேளாண்மைத் துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் , 25 ஏக்கர் தரிசு நிலம் எலுமிச்சை சாகுபடிக்கு சாகுபடி நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த வேளாண் துறை 24 விவசாயிகள் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. வனவிலங்குகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிலம் தரிசாக இருந்தது. இத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களான 24 விவசாயிகள், கிளஸ்டரில் உறுப்பினர்களானார்கள் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க:
தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க ரூ.25,000 மானியம்! Apply Today
5.வானிலை தகவல்
நாளை முதல் மார்ச் 19 வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
தென்னையில் காண்டாமிருக வண்டு - ஒருங்கிணைந்த தடுப்பு முறை
பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டம் - 7 மாவட்ட விவசாயிகளுக்கு ஜாக்பாட்
Share your comments