1. விவசாய தகவல்கள்

விரைவில் தொடங்கிய பருவமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

T. Vigneshwaran
T. Vigneshwaran

மத்திய மற்றும் வட இந்தியாவில் பருவமழை விரைவில் தொடங்கியதால் விவசாயிகளுக்கு நெல் அரிசி, பருத்தி, சோயாபீன் மற்றும் பருப்பு வகைகள் போன்ற கோடைகால பயிர்களை விதைக்க சாதகமான நேரம் வந்துவிட்டது,இந்த நேரத்தில் பயிர்களை நடவு செய்தால் விளைச்சல் நன்றாக இருக்கும்.

இந்தியாவின் வருடாந்திர பருவமழை நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை சூழ்ந்துள்ளது, இது சாதாரண கால அட்டவணையை விட பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே உள்ளது என்று வானிலை துறை அதிகாரி திங்களன்று தெரிவித்தார். இந்த வாரம் வடமேற்கு பகுதிகளில் மேலும்  நிலைமைகள் சாதகமாக உள்ளன.

பருவமழை ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தின் சில பகுதிகளை சூழ்ந்துள்ளது. வழக்கமாக, இது ஜூன் கடைசி வாரத்தில் பஞ்சாபில் பொழியும் என்று வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜூன் 1 க்கு வழக்கமாக பொழியும் பருவமழை மாறாக இந்த ஆண்டு ஜூன் 3 அன்று தெற்கு மாநிலமான கேரளாவில் தொடங்கியது,ஆனாலும் விரைவாக அதன் நிலைப்பாட்டில் வந்தது.

சீசன் துவங்கியதிலிருந்து, பருவமழை சாதாரண மழையை விட 25% அதிகமாக வழங்கியுள்ளது, இது மத்திய இந்தியா பிராந்தியத்தில் அதிக மழைப்பொழிவால் அதிகரித்துள்ளது, ஐஎம்டி தொகுத்த தரவு காட்டுகிறது.

இந்தியாவின் 2.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு பருவமழை முக்கியமானது, ஏனெனில் இது வயல்களுக்கு தேவையான 70% மழையை அளிக்கிறது, இது தவிர நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்புகிறது.

பருத்தி, அரிசி, சோயாபீன், சோளம் மற்றும் பருப்பு வகைகள் போன்ற கோடைகால பயிர்களை ஏற்கனவே தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தொடங்கியுள்ளதாகவும், இந்த வாரம் மத்திய மற்றும் வட இந்தியாவில் தொடங்கலாம் என்றும் மும்பையைச் சேர்ந்த ஒரு உலகளாவிய வர்த்தக நிறுவன வியாபாரி தெரிவித்தார்.

இந்த ஆண்டு அதிக விலை இருப்பதால் விவசாயிகள் அரிசி மற்றும் எண்ணெய் வித்துக்களில் ஆர்வம் காட்டுகின்றனர். சோயாபீன் மற்றும் நெல்லின் கீழ் அதிக பரப்பளவை நாம் காணலாம் என்று வியாபாரி கூறினார்.

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராகவும், பாமாயில்,சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்வதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.

இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 50% நிலங்களுக்கு நீர்ப்பாசனம் கிடைப்பதில்லை, ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் மழையைப் பொறுத்தது. வேளாண்மை பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 15% ஆகும், ஆனால் 1.3 பில்லியன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானது.

மேலும் படிக்க:

பருவமழை2020: தென்மேற்கு பருவமழை காலத்தில் விவசாயம் குறித்த முழுமையான தகவல்களை பெற ஹலோ ஆப் மூலம் கிருஷி ஜாக்ரனுடன் இனணந்திருங்கள்

தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக இருக்கும்- TNAUவின் முன்னறிவிப்பு!

English Summary: Farmers happy with monsoon which started soon Published on: 15 June 2021, 11:29 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.