1. விவசாய தகவல்கள்

2 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 15.7% குறைந்தது- அதிர்ச்சி ரிப்போர்ட்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Farmers' income down 15.7 percent in 2 years

குறுவை சாகுபடியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ரூ.35,000 ஏக்கருக்கு நிவாரணமாக வழங்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதனைப்போன்று, காலநிலை மாற்றத்தினால் 8 நாடுகளில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக farmer voice survey அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவற்றின் முழுத்தகவல் பின்வருமாறு-

1.ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் - EPS அரசுக்கு கோரிக்கை : சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 560 கோடி ரூபாயினை பயிர் காப்பீடு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விபரங்களை முழுமையாக கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் நிவராணத் தொகையாக அரசு வழங்க வேண்டும். அதேப்போல் தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2.காலநிலை மாற்றம்- 8 நாடுகளில் 70 சதவீத விவசாயிகள் பாதிப்பு

Bayer Crop Science நிறுவனம் Farmer Voice Survey என்கிற ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, இந்தியா, கென்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் இந்த கருத்துக் கணிப்பு நடைப்பெற்றுள்ளது. இதில்,  71% விவசாயிகள் காலநிலை மாற்றத்தினால் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், 73% பேர் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் தங்களது மகசூல் குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பருவநிலை மாற்றத்தால் சராசரியாக விவசாயிகளின் வருமானம் 15.7% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் ஆறில் ஒரு விவசாயி 25%-க்கும் அதிகமான வருமான இழப்பை அடைந்துள்ளார் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இனி வரும் காலமும், காலநிலை மாற்றத்தினால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.விவசாயத்துறையில் ட்ரோன் - 50 சதவீத இழப்பை தவிர்க்கலாம்

Skye Air என்கிற நிறுவனம் நடத்திய ஆய்வில் ட்ரோன் தொழில்நுட்பத்தை விவசாயத்துறையில் முழுமையாக ஈடுபடுத்தினால், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை சுமார் 50 சதவீதம் வரை குறைக்க இயலும் என தெரிவித்துள்ளது. விவசாயிகள் அறுவடைக்கு பிந்தைய விளைப்பொருட்களை சேமிப்பு வசதி, போக்குவரத்து வசதி போன்றவற்றில் நிலவும் பிரச்சினையால் உரிய நேரத்தில் சந்தைக்கு கொண்டு செல்ல இயலுவதில்லை.

இதனால் விளைப்பொருள் கெட்டுப்போய் கழிவுகள் அதிகரிக்கும் போக்கு இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இவை அனைத்திற்கும் ட்ரோன் தொழில்நுட்ப முறை தீர்வு வழங்கும் என Skye Air தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. ட்ரோன் செயல்பாட்டினை அறிமுகப்படுத்துவது உற்பத்தி செலவு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

விடாது போலயே- இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சூப்பர்- மின் கட்டண முறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஆணை

English Summary: Farmers' income down 15.7 percent in 2 years as per Bayer report Published on: 24 September 2023, 12:58 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.