ராமதாதபுரம் மாவட்டம் கடற்கரைப் பகுதியாகும். ஆகவே இங்கு வசிக்கும் மக்கள் மீன் பிடி தொழிலை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் நெல், மிளகாய், நிலக்கடலை, சோளம், கேழ்வரகு, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி சத்திரம், பெரியகுளம், பூப்பாண்டியபுரம், கன்னிராஜபுரம், நரிப்பையூர், கடுகு சந்தை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் நிலக்கடலை விவசாயம் முக்கிய சாகுபடியாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் பயரிகளில் நிலக்கடலையும் ஒன்று. இது இம்மாதத்தில் பயிரிட படுவதால் நல்ல மகசூல் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாயல் குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் நிலக்கடலை விவசாயம் செய்வதற்கு உகந்த செம்மண் இருப்பதால் ஆண்டுதோறும் நிலக்கடலைபயிர் செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வத்துடன் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர், இதில் அவர்கள் நல்ல வருமானத்தையும் ஈட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சுற்றி உள்ள சத்திரம், மலட்டாறு, கன்னியாபுரம், நரிப்பையூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயிகள் வளர்ந்து நிற்கும் நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலை விவசாயத்தை பொருத்த வரை அதிக நீர் தேவை இல்லை. அதிக மழை பெய்யும் பட்சத்தில் நிலக்கடலை செடிலையே அழுகும் அபாயம் உள்ளது.
இந்த ஆண்டு இராமநாதப்புரத்தில் ஓரளவு குறைந்த மழையே பெய்துள்ளதால் நிலக்கடலை செடிகளும் நன்கு வளர்ந்துள்ளன.
நிலக்கடலை விவசாயம் குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்ட போது, இந்தாண்டு மழை பொழிவின் அளவு செடிகளுக்கு ஏற்ப இருந்ததால், செடிகள் நன்கு வளர்ந்து இருந்தன. ஆனால் வேர் பூச்சி காரணமாக ஏராளமான செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வேர் பூச்சி தாக்குதலால் நிலக்கடலை செடிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. வேளாண் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும், மேலும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments