பாரதீய கிசான் யூனியன் விவசாய அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகை, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்திருப்பதாக குறிப்பிட்டார். அவர் ஏன்?, அவ்வாறு கூறினார். இதற்கான காரணம் என்ன? தெரிந்துக்கொள்ள கீழே படியுங்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய அமைப்பினர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் 2021-ம் ஆண்டு நவம்பர் வரை டெல்லி எல்லையில் ஒய்வில்லா போராட்டத்தை நடத்தி வந்தனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்புக்கு பிறகு போராட்டத்தை விவசாயிகளஅ வாபஸ் பெற்று, அங்கிருந்து வீடு திரும்பினர்.
இதைத் தொடர்ந்து, தற்போது ராகேஷ் டிகைத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம்: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கடந்த டிசம்பர் 9ம் தேதி மத்திய அரசு கடிதம் அளித்தது. ஆனால் உறுதி அளித்தது போல் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருடமாக, விவசாயிகள் குளிர், வெயில் என பாராமல் டெல்லி எல்லையில், 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய அமைப்பினர், நடத்திய போராட்டம் பற்றிய தகவல் நாடு முழுவதும் அறிந்ததே. இந்த போராட்டம், நல்ல முடிவுகளுடன் நிறைவுற்றது என நம்பியிருக்கும் நிலையில், திடீரென ராகஷ் டிகை கூறியது, சர்ச்சையாகி வருகிறது.
மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து கேள்வியும் எழும்புகிறது. இருப்பினும் இந்த சட்டங்கள் குறித்து உண்மையில் மத்திய அரசு என்ன செய்ய உள்ளது என்பது குறித்து, நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விவசாய அமைப்புகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும். மேலும் ஜனவரி 31-ம் தேதியை அதாவது இன்று துரோக நாளாக விவசாயிகள் கடைப்பிடைக்க உள்ளதாக, ராகேஷ் அவர்கள் தெரிவித்தார். நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரவிளித்து, மத்திய அரசுக்கு கண்டனத்தைத் தெரிவிப்பர் எனவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க:
ரயில்வே ஆட்சேர்ப்பு 2022 : விண்ணப்பிக்க கடைசித் தேதி பிப்ரவரி 16!
Share your comments