ரஷ்யா உக்ரைன் மீது நடத்தியுள்ள போர் காரணமாக, இந்தியாவில் உரங்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போர் காரணமாக, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடை விதித்துள்ளன. உக்ரைனில் ஏற்பட்டுள்ள கடுமையான சேதத்தை தொடர்ந்து அந்த நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்பதால், ஏற்றுமதி வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளன.
பொதுவாக இந்தியா விவசாயத்திற்கு தேவையான உரங்களின் மூலப்பொருள் பொட்டாஷை பெலாராஸ் மற்றும் ரஷ்யாவில் இருந்துதான் அதிகளவில் இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால் தற்போது அங்கு நிலைமை மாறிவிட்டது.
ஏற்கனவே, உக்ரைன், ரஷ்யா, பெலாரஷ் ஆகிய நாடுகள் இந்தியாவின் பொட்டாஷ் இறக்குமதியில் 12 சதவீதமாக செய்துள்ளன. முன்னதாக ரஷ்யா துறைமுகங்கள் வாயிலாக பெலாரஸிலிருந்து பொட்டாஷை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யமுடிந்தது. இந்த நிலையில் ரஷ்யா மீது ஏற்பட்டுள்ள பொருளாதார தடை உள்ளதால் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
600 டாலர்
அதேநேரத்தில்பொட்டாஷ்யத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் கனடா, அதனை வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, தற்போது நம்நாட்டில் பொட்டாஷ் சப்ளையில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இறக்குமதி செலவு மெட்ரிக் டன்னுக்கு 500 முதல் 600 டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உரத்தின் விலை அதிகரித்தால், அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் மானியத்தை வழங்கிய வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால், பட்ஜெட்டில் உரத்துக்காக ஒதுக்கப்பட்ட மானிய அளவைவிட அதிகமாக ஒதுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசு தள்ளப்படும்.
இந்தச் சூழ்நிலையில் தங்களுக்குத் தேவையான உரத்தை வாங்கி வைத்துக்கொள்வதன் மூலம் நிதிச்சுமையை விவசாயிகள் குறைத்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
200 ஆடுகள், 2500 கிலோ பிரியாணி- சுடச்சுட பிரியாணிப் பிரசாதம்!
Share your comments